பஞ்சமி நிலங்களை காணவில்லை
பஞ்சமி நிலங்களை காணவில்லை அதெல்லாம் தலித்துக்களுகானது,
அதை மீட்டாக வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது
இனி மதுரையில் பாண்டிய மன்னன் திருவிளையாடல் காலத்தில் பாணபுத்திரனுக்கு கொடுத்த நிலம் எங்கே என ஒரு கோஷ்டி வரும்
அப்படியே குற்றால குறவஞ்சி பாடியவனுக்காக பாண்டிய மன்னன் கொடுத்த நிலம் எங்கே என்றும் வருவார்கள்
நிலத்தை தோண்டி பார்த்திருக்கின்றோம், நில வரலாறை தோண்டும் கோஷ்டியினை இப்பொழுதுதான் பார்க்கின்றோம்
ஆனால் ஒன்று உண்மை
இந்த பஞ்சமர் எனப்படும் ஒடுக்கபட்டோருக்கான அல்லது அப்படி சொல்லிகொள்பவர்களுக்கான நிலத்தை அபகரித்தவன் யாராக இருப்பான் தெரியுமா?
நன்றாக எழுதி வைத்து கொள்ளுங்கள்
அவன் பெரியார், அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், காரல் மார்க்ஸ் என புரட்சி படம் பிடித்தவனாக இருப்பானே அன்றி அல்லது அந்த சாயல் கட்சிக்காரனாக இருப்பானே அன்றி மாறாக கடவுள் பெயரை சொல்லி அனுதினமும் வழிபாடு நடத்துபவனாக இருக்கவே மாட்டான்.
ஆம் அவனுக்கு மனசாட்சி உண்டு, தெய்வ பயம் உண்டு, அந்த பாதகத்தை செய்யமாட்டான்
மாறாக பகுத்தறிவு, சமத்துவம் கடவுள் இல்லை என சொல்லும் கோஷ்டி கடவுளுக்கே பயப்படாத பொழுது மனசாட்சிக்கு எப்படி அஞ்சும்?