படாதபாடு படுகின்றது அமெரிக்கா
ஈரானின் ஹோர்ம்ஸ் பகுதியினை சோமாலியாவின் ஏடன் வளைகுடா போல பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க படாதபாடு படுகின்றது அமெரிக்கா
ஏன் அப்படி அறிவிக்கபட வேண்டும் என்றால் அங்குதான் வில்லங்கம் இருக்கின்றது
ஒருவேளை அப்படி அறிவிக்கபட்டால் அங்கு பன்னாட்டு படை நிறுத்தபட வேண்டும்
புரிகின்றதா? ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை முன்பு சதாமுக்கு எதிராக திரட்டியதை போல் திரட்ட தயாராகின்றது
ஆனால் ஒருநாடும் அமெரிக்கா பின்னால் செல்லவில்லை என்பதுதான் சோகம், இது அமெரிக்காவுக்கு பலத்த அதிர்ச்சி என்பதால் கனத்த மவுனம்
ரஷ்யாவும் அடித்து ஆடுகின்றது, சீனா, இந்தியா, சிரியாவினை தொடர்ந்து துருக்கிக்கும் எஸ் 400 சிஸ்டத்தை வழங்கிவிட்டது
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 வாங்கினால் அமெரிக்க எப் 21 கிடைக்காது என என்ற மிரட்டலுக்கு ரஷ்ய பதிலடி கடுமையாக இருக்கின்றது
அவர்கள் எப் 21 தராவிட்டால் அதைவிட மிக நுட்பமான ஐந்தாம் தலைமுறை விமானமான சு 57 விமானத்தை இந்தியாவுக்கு கொடுக்க தயார் என்கின்றது ரஷ்யா
சு57 மிக நவீன ஸ்டெல்த் ரகம், ரஷ்யாவினை தவிர எந்த நாட்டிடமும் இல்லா வகை அது. அதையே இந்தியாவுக்கு தர தயார் என அந்நாடு அறிவித்திருப்பது இந்திய ராஜதந்திரத்துக்கு மாபெரும் வெற்றி
நிச்சயம் மோடி அரசின் பெரும் ராஜதந்திர நகர்வின் வெற்றி அது, வாழ்த்துக்கள் மோடி