படித்த பெண்கள் ஆளட்டும் ஆளவேண்டும்

ஹிலாரி கிளிண்டன், ஏஞ்சலா மெர்கோல், தெரசா மே என ஒவ்வொரு நாடு கற்றறிந்த படித்த பெண்கள் ஆளட்டும் ஆளவேண்டும் என துடியாய் துடிக்கின்றது

திறமையும் ஆற்றலும் கல்வி பெருமையும் கொண்ட பெண்கள் ஆளவரட்டும் என கடும் ஆர்வத்தில் இருக்கின்றன‌

அதில் ஜெர்மனி எங்கோ உச்சத்தில் இருக்கின்றது, பிரிட்டன் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றது

அவர்கள் கன்னியாஸ்திரிகளை இல்லை கிறிஸ்தவ வெள்ளுடை மதவாதிகளை நிறுத்தவில்லை மாறாக திறமை இருப்போரை நிறுத்தினார்கள், வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்

இங்கு பாருங்கள் உமா பாரதி, பிரக்யா சாத்வி என சந்நியாசி பெண்களை முன்னுறுத்துகின்றார்கள்

தேசம் உருப்படுமா என்றால் நிச்சயம் உருப்படாது…

இங்கு தேவை கல்வியும் வளர்ச்சியும் முன்னேற்றமுமே அன்றி சாமியார் மடங்களும், சந்நியாசிகளின் சங்கமமும் அல்ல

உலகெல்லாம் சுற்றிவந்தும் மோடி கொஞ்சமும் திருந்தியதாக தெரியவே இல்லை