பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

அட பாவிபயலுகளா….

நீங்கள் இதனை கருப்பு தினமாக்கினால், இந்திரா எமர்ஜென்ஸி அறிவித்த ஜூன் 25ம் தேதியினை அவர்கள் கருப்பு நாளாக அனுசரிக்க மாட்டார்களா?

நீங்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்று சீன பொருட்களை தடுக்க முடியாமல் தடுமாறுவதை உனர்ந்து அந்த தேதியியினை கருப்பு தினம் ஆக்கமாட்டார்களா?

இந்த அரசியல் எல்லாம் உருப்படாது, மாறாக திருப்பியடிக்கும்

கருப்பு தினம் அனுசரிப்பதென்றால் காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு போன்ற தினங்களில் அனுசரியுங்கள்

அது நியாயம், அது தர்மம்


ஜிஎஸ்டி புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நல்ல வேளையாக செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டுங்கள் என அமைச்சர் சொல்லவில்லை

ஏன் அமைச்சரே, ஆக ஜிஎஸ்டி வரி ஒரு செருப்பு. எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கி எறிவீர்கள் அப்படித்தானே?


அடுத்தமுறை காங்கிரஸ் பதவிக்கு வந்தால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என சட்டம் இயற்றுவோம் -குலாம் நபி ஆசாத்

அதாவது பணம் பதுக்கி வைத்திருப்போருக்காக புதிய சட்டம் இயற்ற போகின்றாராம்

மிஸ்டர் ராகுல், உங்கள் எதிரிகள் எங்கிருக்கின்றார்கள் என கண்டுகொள்ளுங்கள்

நீங்கள் பிரதமராவது பிடிக்காத கூட்டம் உங்கள் அருகிலே இருக்கின்றது