பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இந்த கருப்பு பணத்தை ஒழிக்க போகின்றேன் என மோடி தேன் கூட்டில் கை வைத்து சிக்கிய நாள் இன்று , ஆளாளுக்கு ஏகபட்ட பொங்கல்கள், கத்தல்கள் இன்ன பிற
நாட்டின் வளம் எதில் இருக்கின்றது? மக்கள் செலுத்தும் வரியில் இருக்கின்றது , ரிசர்வ் வங்கி அடிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கைமாறும் பொழுது குறிப்பிட்ட காசு வரியாக வரவேண்டும் பல கைகள் மாறிவரும்பொழுது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் பல மடங்கு பெருக வேண்டும்
ஆனால் வரியே கட்டாமல் மறைத்து கடைசியில் அந்த ஒரிஜினல் நோட்டையும் மறைத்தால் நிலமை விபரீதமாகும், இந்தியாவில் அதுதான் நடக்கின்றது
வரியாக வரவேண்டிய பணத்தை பதுக்குகின்றார்கள் அதை செல்லாது என அறிவித்தாட்டால் அப்பணம் வெளிவரும் என்ற கணக்கில்தான் அந்த அதிரடி திட்டம் அறிவிக்கபட்டது
ஆனால் யானை வேட்டையாடபடும் பொழுது சிறு உயிர்கள் சாவது போல பல மக்கள் பாதிக்கபட்டனர் , மறுக்க முடியாது
பெரும் தொழிலதிபர்களை வைத்து நடத்தபட்ட குறிக்கு அப்பாவி ஏழைகளும் நடுத்தர மக்களும் பாதிக்கபட்டனர்
இன்னொன்று மோடி அறிவித்தாரே தவிர அதிகாரிகள் ஒருவரும் ஒத்துழைக்கவில்லை, பணக்காரர்களின் கைபாவையான வங்கிகள் அவர்களுக்கு ஏஜென்ட்டாகவே செயல்பட்டன, பெரும் பணக்காரர் வீடுகளில் இருந்து புது நோட்டுகள் கைபற்றபட்டதே சாட்சி
இன்னொரு கோணமும் உண்டு , இதனால் இந்திய பொருளாதாரம் சரியும் , ரூபாய் சரியும் என தெரிந்து 2000 நோட்டுகளுக்கு வந்திருக்கின்றார்கள், இது எதிர்பார்த்தது தான்
நிச்சயம் ரூபாய் நோட்டினை ஒழித்தது அதிரடிதான், நல்ல முயற்சிதான் ஆனால் சரியாக செயல்படுத்ததால் அதில் சிக்கல்கள் வந்தன
எனினும் ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றனர்
இந்த நடவடிக்கை எடுக்கபட்டபின்புதான் பல பிம்பங்கள் சரிய தொடங்கின , விஜய் மல்லையா, நீரவ் மோடி இன்னபிற சாம்ராஜ்யங்கள் எல்லாம் இதன் பின்பே சரிய ஆரம்பித்தன
பல தொழில்கள் பாதிக்கபட்டது உண்மைதான், நல்ல பணத்தில் தொழில் நடந்தால் ஏன் பாதிப்பு வரப்போகின்றது என்பதுதான் தெரியவில்லை
நிச்சயமாக 1990வரை இந்தியாவில் பணபுழக்கம் அதிகமில்லை, தாரளமயமாக்கலுக்கு பின் பணபுழக்கம் வெள்ளமென பாய்ந்தது, நிலங்கள் விலை எல்லாம் அதிகரித்தன
ரியல் எஸ்டேட் என்பது கருப்பு பணம் விளையாடும் இடமானது
இந்த நடவடிக்கைக்கு பின் நிலமதிப்பு சரிந்திருக்கின்றது ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்
ஆயிரம் சொல்லலாம், ஆனால் எம்மை பொறுத்தவரை இந்த நடவடிக்கையால் கருப்புபணம் ஓரளவு ஒழிக்கபட்டது , கருப்பு பணத்தினால் தொழில் நடத்தியவர்கள் பாதிக்கபட்டார்கள், அவர்கள் தொழிலும் பாதிக்கபட்டது என்பது மகா உண்மை
இயல்பாக வளராமல் ஊதிபெரிதாக்கபட்ட இந்திய பொருளாதார பிம்பம் மோடியின் இந்த நடவடிக்கையினால் உடைக்கபட்டது என்பதுதான் விஷயம்
உண்மையும் அதுதான் எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது, விலைவாசி கடுமையாக உயர்ந்தது, நிலம் தங்கம் என பணம் எங்கிருந்தோ கொண்டுவந்து கொட்டபட்டது
பெரும் மால்களும் கட்டங்களுமாக எல்லாம் கொஞ்ச காலத்தில் உருமாறியது
அது யார் பணம்? மூலம் என்ன? என்பதெல்லாம் யாருக்கும் விளங்கவில்லை, அன்றாட கூலி 500 , 800 என்பதெல்லாம் சாதாரணமானது மக்களும் மகிழ்ந்தார்கள்
பணபுழக்கம் வந்ததே தவிர அதன் மூலம் தெரியவில்லை, இந்த ஒழிப்பிற்கு பின் அனைத்தும் ஆடிபோய் நிற்கின்றது
நிலவிலை , வீட்டு விலை எல்லாம் சரிந்து கிடக்கின்றன, பல நிறுவணங்கள் ஓட்டம் பிடித்தன், தொழிலதிபர்கள் பறந்தார்கள் இன்னும் ஏராளம்
உறுதியாக சொல்லலாம் அந்த அடியினை மோடி அடிக்காவிட்டால் இன்று நிலம் விலை எல்லாம் எங்கோ சென்றிருக்கும் , வருங்கால சந்ததி ஏதும் நினைத்துபார்க்கவே முடியாத அளவு விலை சென்றிருக்கும்
மிக நல்ல நடவடிக்கை இது, நடைமுறைபடுத்துவதில் சில அசவுரியங்கள் இருந்திருக்கலாம் , மிகபெரும் நாட்டில் அதெல்லாம் தவிர்க்க முடியாதது
மற்றபடி வரவேற்கதக்க நடவடிக்கை என்பதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது
எந்தெந்த தொழில் எல்லாம் பாதிக்கபட்டது என புலம்புகின்றார்களோ , ஆழ கவனித்தால் அதெல்லாம் கருப்புபணத்தில் வாழ்ந்த தொழிலன்றி வேறல்ல
[ November 8, 2018 ]