பன்னீரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராமராஜன் …

பன்னீரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராமராஜன்

ராமராஜனே கட்சி மாறிவிட்டார் என்றால் இனி சொல்ல என்ன இருக்கின்றது? மனிதரும் எத்தனை நாள்தான் சும்மா இருப்பார்?

பன்னீரை ராமராஜன் சந்தித்ததை விட மகா முக்கியமான விஷயம் பன்னீர் வீட்டில் சில மாடுகள் உண்டு என்பது, அதில் கறவை மாடுகளும் உண்டு

பன்னீருக்கு எத்தனை சிக்கல்கள் ஒரே நேரத்தில் தீருகின்றது பார்த்தீர்களா? இதுதான் நேரம் வந்தால் எல்லாம் சரியாகும் என்பது

சரத்குமார், ராமராஜன் என எல்லோரும் வரும்பொழுது நமது எதிர்பார்ப்பு எங்கிருக்கின்றது?

அம்மா ஆசிபெற்ற விந்தியா விரைவில் வருவார், அதனை விட மகா எதிர்பார்ர்பு என்னவென்றால், விரைவில் நமீதா பன்னீரை சந்தித்த்து தன் பிரமாண்ட ஆதரிவினை தெரிவிப்பார்

நமீ தா வா.. ஆதரவை தா