பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு பதிவாகிவிட்டது, அந்த கட்சி கலாச்சாரம் அது. ஜெயா வழியில் கட்சி ஆட்சி என அவர் சொன்னபொழுதே இப்படி சிக்குவார் என உறுதியாயிற்று

கட்சி கொள்கைபடி செயல்பட்டிருக்கின்றார் இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு துணை முதலமைச்சர் மேல் சொத்துகுவிப்பு வழக்கு தொடரபட்டிருக்கின்றது. அவர் நிச்சயம் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல‌

அவரை பதவி விலக சொல்லவோ இல்லை அவரை நீக்கு என பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் அரசியல் கள்ளத்தனம்

காரணம் பன்னீரை தள்ளினால் ஆட்சி கலையும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக பன்னீர் எவ்வளவு சொத்து குவித்தாலும் அவர் மேல் எவ்வளவு வழக்கு வந்தாலும், அவர் அங்கம் வகிக்கும் பழனிச்சாமி அரசினை கலைக்க ஒருவருக்கும் விருப்பமே இல்லை என்பது புரிகின்றது

கூட்டுகளவாணிதனம் என்பது இதுவே தான்

ஆக பன்னீருக்கு சின்னம்மா பக்கத்தில் இப்பொழுதே சிறை தயாராகிகொண்டிருப்பது புரிகின்றது