பறக்கும் குண்டுகள்
1945ல் இதே நாளில்தான் ஹிட்லரின் மிகபெரும் ஆயுதமான பறக்கும் குண்டுகள் வி2 லண்டனை கடைசியாக தாக்கின, அதன் பின் ஹிட்லரின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது
ராட்சத குண்டு ஒன்று பறந்து சென்று விழவேண்டும் என கனவு கண்டான் ஹிட்லர் அவனுக்கு உதவினான் வார்ன் பிரவுண்
அந்த வி2 ராக்கெட்டை செய்து உலகை அச்சுறுத்தினான் ஹிட்லர், இது ஏவபட்டால் லண்டன் அழியும் என கொக்கரித்தான்
உலகமே அதை கண்டு நடுங்கிகொண்டிருந்தது, உண்மையில் அணுகுண்டு செய்து அதை லண்டன் தலையில் போடுவதே அவன் திட்டம் ஆனால் அவனால் முழுவெற்றி பெறமுடியவில்லை
எனினும் முக்கால்வாசி வெற்றியினை நெருங்கியிருந்தான்
கடைசி வரை மிரட்டமுடியவில்லை, பல்லாயிரம் பேரை கொல்லும் பறக்கும் குண்டு என அவன் வீசிய வி2 ராக்கெட் வெறும் 10 பேரைதான் கொன்றது
ஆனால் அதுதான் வரலாற்றை மாற்றியது
ஹிட்லரை மண்டையில் போட்டபின் வார்ன் பிரவுணை ரஷ்யா தேட, அமெரிக்காவோ கோழி அமுக்குவது போல கொத்தி சென்றது
அதன்பின் அமெரிக்க ஏவுகனை நுட்பம் எங்கோ சென்றது
இன்று நாம் செய்திருக்கும் சேட்டிலைட் எதிர்ப்பு ஏவுகனையினை 1959லே செய்தது அமெரிக்கா
இன்று உலகம் அதிவேக ஏவுகனைகளை பெற்றுவிட்டாலும், முதன் முதலில் ஹிட்லர் செய்த அந்த பறக்கும் குண்டுகளை இன்று லண்டன்வாசிகள் அச்சத்தோடு நினைவு கூறுகின்றனர்
அதுதான் வான்வெளி பாய்ச்சலுக்கு முதல் படி, அதை செய்தவன் ஹிட்லர்