பலரை ஆடவிட்டு கிளைமேக்ஸில் வருவது ரஷ்ய ஸ்டைல்

Image may contain: 2 people, people standing, outdoor and water

எப்பொழுதுமே பலரை ஆடவிட்டு கிளைமேக்ஸில் வருவது ரஷ்ய ஸ்டைல்

அப்படி இப்பொழுது வடகொரிய விவகாரத்திலும், “அங்க என்னப்பா இழுபறி?” என வந்தாயிற்று. நேற்று ரஷ்யாவின் அரசபிரதிநிதி வடகொரிய அதிபரை சந்தித்துவிட்டார்

சீனா தவிர வேறு நாட்டு அரசதந்திரிகள் வடகொரியா என்றாலே அலறி ஓடும் நிலையில் ரஷ்ய அரசதந்திரி வந்திருப்பது வடகொரியாவிற்கு மிகபெரும் மகிழ்ச்சி

இருவரும் பலமணிநேரம் பேசியிருக்கின்றார்கள், நாங்கள் அணுஆயுதத்தை கைவிட்ட பின்பும் டிரம்ப் முரண்டு பிடிக்கின்றார் என்றிருக்கின்றார் வடகொரிய அதிபர்

அதற்கென்ன நீங்கள் ரஷ்யாவந்து புட்டீனை பாருங்கள் என சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார் ரஷ்ய தூதர்

விரைவில் கிம் புட்டீனை சந்திக்கலாம் என்ற செய்திகள் வருகின்றன‌

இனி டிரம்ப் சும்மா இருப்பாரா? அலறி அடித்துகொண்டு வடகொரிய அதிபரை சந்திக்க பறந்து வருவார்