பலே மன்னா பலே

“நம் நாடக கம்பெனியில் அடுத்து என்ன நாடகம் மன்னா ?

ம்ம் தரைபடை ஆகாயபடை என இரண்டையும் வைத்து ஆடியாகிவிட்டது

அடுத்து கடலா?

ஆமாம் ஆமாம், இன்னும் 10 நாள் இருக்கின்றது அதற்குள் நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி சென்று ஆழ்கடலில் முத்தெடுத்து வரலாம் என இருக்கின்றேன், கடற்படையினை மட்டும் ஏன் விடுவானேன்?

நீங்களும் வாருங்கள், கடலடியில் பாகிஸ்தான் நீர்மூழ்கியினை உடைத்துவிட்டோம் என சொல்வோம், ஆதாரம் கேட்டால் 1971ல் வங்கபோரில் உடைபட்ட பாகிஸ்தானின் ஹாஜி விசாகபட்டினம் கடலில்தான் கிடக்கின்றதாம், அதை காட்டிவிடலாம்

எப்படி என் ராஜதந்திரம்

பலே மன்னா பலே..”