பல வகையான திருமா
பல வகையான திருமா உண்டு ஒருவர் தேர்தல் காலத்தில் சிதம்பரம் நடராஜர் ஆலயம் முதல் கோவில் கும்பாபிஷேகம் வரை செல்வார், சமத்தாக இருப்பார்
இன்னொரு திருமா இப்படி சனாதான ஒழிப்பு இந்துத்வா ஒழிப்பு என திரிவார், புத்தமத அபிமானி
இது போக இன்னொரு திருமா இருந்தார், அவர் பிரபாகரனுக்கு கொடிபிடித்துவிட்டு ராஜபக்சேவிடம் பல்லை காட்டுவார், நான்காவது ஒரு திருமா இருந்தார் அவர் கருணாநிதிக்கு வாலாகவும் ஜெயாவுக்கு தலையாகவும் விளங்கினார்
இப்படி ஏகபட்ட திருமாக்கள் உண்டு என நம்பியிருந்தோம்
நாமும் ஏகபட்ட திருமாக்கள் உண்டோ என தேடிபார்த்தால் அவர் ஒருவர்தான் ஆனால் சில நேரங்களில் இப்படி ஆகிவிடுவாராம் பாவம், ஏதோ மனநல கோளாறு.
பிரபல பெரியாரிஸ்டான டாக்டர் ஷாலியால் கூட குணபடுத்தமுடியவில்லை
அவர் எம்பியாக இருப்பது சிதம்பரம் மக்களின் தலைவிதி
அந்த திருமா சொல்லியிருப்பது கண்டிக்கதக்கது, இந்து ஆலய கோபுரங்கள் ஆபாச சிற்பம் கொண்டவை அல்ல
இந்து ஆலய மகா கோபுரங்கள் வாழ்வின் எல்லா நிலைகளையும் சிற்பமாய் சொன்னவை, எல்லா வகை சிற்பமும் அதில் உண்டு. அவதாரங்களின் உருவங்கள், திருவிளையாடல் உருவங்கள், அருள் வழங்கும் உருவங்கள் என பல உண்டு
அப்படியே வாழ்வின் இன்னொரு பக்கங்களுக்கான சிற்பமும் உண்டு
காரணம் அது இந்நாட்டின் வாழ்வியல் அங்கமாய் இருந்தது. கடவுளையே குடும்பமாக கண்ட சமூகம் இது, தாம்பத்யம் வாழ்வின் அங்கமாய் இருந்தது, முனிவர்கள் கூட அதை ஏற்றுகொண்டார்கள்
இல்லறத்தை நல்லறமாய் நடத்துவதே படைப்பின் தத்துவம் என போதித்த பூமி இது
ஏன் வள்ளுவனே இன்பத்து பால் என ஒன்றை ஏன் எழுதினான்?
கம்பனின் தனிபாடல் திரட்டு சொல்வதென்ன? அக்நானூறு முதல் ஏகபட்ட சங்க இலக்கியங்கள் சொல்வதென்ன?
சரி ஆலய கோபுரத்தை பார்ப்பான் அமைத்தான் ஆபாசமென்றால் , ராஜராஜ சோழன் பார்ப்பானா?
இலக்கியங்களில் இருக்கும் விஷயங்கள் பார்ப்பானியமா?
வள்ளுவன் இன்பத்துபாலை எழுதினானே? அவன் பார்பான் இல்லை காவி கூடாது என சொல்லும் கூட்டமும் இதுதான், இப்பொழுது அய்யயோ ஆபாசம் என சொல்வதும் இதுதான்
அக்காலத்தில் தாம்பத்யம் என்பது தியானங்களின் ஒன்றாக கூட கருதபட்டது, அது ஒருவித மோன நிலைக்கு மனிதனின் மனநிலையினை கொண்டு செல்வதாக போதிக்கபட்டது
அதிவீரராம பாண்டியனும் , வாத்சாயனும் எழுதிய உண்மை தத்துவம் அதுவே
திருகுறள், அர்த்தசாஸ்திரத்தை அடுத்து ஐரோப்பா கொண்டாடிய நூல் வாத்சாயனாரின் நூலே
தெய்வத்தை வணங்கி தியானிக்கும்பொழுது அதில் இரண்டற கலந்து மோன மோக நிலையின் உச்சதில் பாடும் சில இலக்கியங்களை அந்நாளைய சமூகம் அங்கீகரித்திருந்தது
ஜெயதேவர் என்பவரின் பாடல் தொகுப்பு அதில் ஒன்று, ஆண்டாளின் பாடலில் கூட அச்சாயல் உண்டு
ஏன் பைபிளின் உன்னத சங்கீதம் கூட அந்த வகையறாவே , அதைதான் கிருஷ்ண லீலை என இங்கும் சொல்லபடும் பாடல்களாயின, அதன் உண்மையான அர்த்தம் பக்தியின் உச்சமோன நிலை
ஆனால் பகுத்தறிவில் அர்த்தம் சொல்லி அவற்றை ஆபாசமாக்கிவிட்டார்கள் அயோக்கியர்கள்.
ஆக மானிட உணர்வின் உச்சபட்டமான இன்பநிலையினை கடவுளோடும் கலந்து உணர்ந்த சமூகம் இது
அது பாடல்களில் உண்டு, இலக்கியங்களில் உண்டு, அப்படித்தான் ஆலய கோபுரங்களிலும் வந்தன அன்றி வேறல்ல
ஓஷோ போன்றவர்கள் சொல்வார்கள், தியானத்தின் உச்சியில் பெறும் விஷயத்தை காமத்திலும் பெறலாம் என்பார், அதற்காக பொறுக்கிதனம் செய்வது அல்ல, அன்பின் உச்சியில் எழும் தாம்பத்தியம் தியானத்துக்கு சமம்
கடும் தவம் இயற்றும் சில முனிவர்கள், துறவிகள் தியானத்திலே பெரும் திருப்தியும் பெரும் பரவச நிலையினை அடைந்துவிடுவதால் பெண்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தோன்றாது, உலக அழகியே வந்தாலும் தள்ளி நில்லம்மா என்றுதான் சொல்ல தோன்றும்

ஆம் தியானத்தின் சக்தி அது, விவேகானந்தர் அதில் மிகபெரும் உதாரணமாயிருந்தார், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கட்டத்தில் தன் மனைவினை சகோதரியாய் நோக்கியது அப்படித்தான்
இயேசுவும் , விவேகானந்தரும் இன்னும் பல துறவிகளும் பெண் சீடர்கள் இருந்தாலும் முழு முழு பரிசுத்தமாய் இருந்தது அப்படித்தான்
மானிட மனம் அடங்கி ஒடுங்க ஒரு புள்ளி தேவைபடுகின்றது, அவனின் சப்தநாடியும் ஒடுங்கி அடங்க ஒரு அனுபவமும் பயிற்சியும் வேண்டி இருக்கின்றது, மொத்த உணர்வினையும் ஒற்றை புள்ளியில் குவிக்கும் மனிதன் தெளிவடைகின்றான்
முனிவர்கள் அதை தியானத்திலும் தவத்திலும் கண்டார்கள், அதை அப்படி பெற முடியாதவர்கள் இல்லற வாழ்விலாவது பெறுங்கள் என போதித்தார்கள்
இது எல்லா பண்டைய மதங்களிலும் இருந்திருக்கின்றது, ஆனால் அவை அழிந்துவிட்டன இல்லை மறைக்கபட்டுவிட்டன
பண்டைய பாபிலோனும், எகிப்தும், ரோம கிரேக்க மதங்களும் இப்படித்தான் இருந்திருக்கின்றன, பின்பு இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல சிலைகளை ஆலயத்தில் இருந்து அகற்றின.
உருவவழிபாடு கூடாது என்றும் ஆபாசம் என்றும் அவை ஒதுக்கினாலும் அச்சமூகம் அந்த சிலைகளை கலைகளாக பார்த்து பாதுகாத்தது
இன்று ஐரோப்பாவில் காணும் நிர்வாண சிலைகள் அப்படி வந்த தொடர்ச்சியே, நமது மண்ணின் சிலைகளுக்கு அவர்கள் கொட்டி கொடுப்பதும் அந்த தேடலே..
இந்துமதம் அதன் இயல்பிலே தொடர்ந்துவருவதால் இன்றுவரை இச்சிலைகள் ஆலயத்தில்
நீடித்து வருகின்றன
காமம் ஒதுக்கவேண்டிய விஷயமல்ல, அது ஒரு நெருப்பு அதை வைத்து தீபமேற்றலாம், சமைக்கலாம், தன்னை தானே கொளுத்தியும் சாகலாம்
காமம் என ஒன்றில்லையேல் உயிர்கள் ஜனிக்கும்? உலகில் மானிடர் தொடர்ந்து இருக்க முடியும்?
அதனால் அதில் ஒரு சிருங்கார லயத்தை கலந்துவிட்டான் சிருஷ்டிகர்த்தா, ஒருவித மயக்கமான அந்ந இனம்புரியா உணர்வில்தான் உலகில் உயிர்கள் வந்துகொண்டே இருக்கின்றன
அந்த இனம்புரியா உணர்விலும் கடவுளை காண சொன்னது இந்துமதம், அதை சிற்றின்பம் எனவும் வகைபடுத்தி அதைதாண்டி பேரின்பம் உண்டு எனவும் அழுத்தி சொன்னது
அந்த பேரின்பத்தை இறைவன் எனவும் போற்றி சொன்னது
இந்து ஆலய கோபுரங்கள் ஆயிரம் அர்த்தம் வாய்ந்தவை, ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு தத்துவத்தையும் நீதியினையும் தர்மத்தையும் வாழ்வியல் அம்சத்தையும் போதிப்பவை
அதை கூர்ந்து பார்த்தால் ஆழ கவனித்தால் விஷயம் புரியும், ஆச்சரியமான ஞானமெல்லாம் கிடைக்கும்.
ஆலய சிற்பங்கள் காமத்தில் கரைந்தோருக்கு அதிலும் கடவுளை தேட சொன்னது, பதின்ம வயதினருக்கு தாயும் தந்தையும் சொல்லா விஷயங்களை விளக்கியும் சொன்னது
அதன் தத்துவங்களும் போதனைகளும் ஆழமானவை, அவற்றை ஞானத்தால் நோக்க வேண்டும்
மாறாக எதையோ நினைத்துகொண்டு பார்த்தால் இந்த திருமாவுக்கு புத்தி போவது போலத்தான் போகும்
மனிதரை சொல்லி ஒன்றும் ஆகபோவதில்லை , பாவம் அவரும் மனிதரே. அவரின் அடிபொடிகள் எல்லாம் காதல் என சில விஷயங்களை செய்து நடக்க வேண்டியவற்றை நடத்தி கொண்டாடுகின்றன
இதை எல்லாம் பார்க்கும் திருமாவுக்கு வெறுப்பு வராதா?
ஆக அவர் கத்துவது இந்து வெறுப்பில் அல்ல மாறாக ஏதோ ஏக்க பெருமூச்சிலும் இயலாமையிலும் கத்துவது போல் தெரிகின்றது
அவருக்கு ஒரு திருமணம் செய்துவைத்துவிட்டால் எல்லாம் சரியாகும், அதற்கு அவர் வாக்குக்காக கை ஏந்தி நின்ற தில்லை நடராஜ பெருமான் அவருக்கு தேர்தல் வெற்றி அளித்தது போல ஒரு மனைவியினையும் அருளட்டும்
ஆம் ஒரு மனைவினையாவது அருளட்டும், அதன் பின் எல்லாம் சரியாகும்
கிடைக்கும் மனைவி ஸ்டாலினுக்கு துர்கா ஸ்டாலின் போல அமைய பிரார்த்திப்போம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்