பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார்

Image may contain: 1 person, smiling, standing

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார்

இந்தியாவினை சுற்றி சீனா ஆணியடிக்க, சீனாவின் நடமாட்டத்தினை முடக்கும் விஷயங்களிலும் இந்தியா கவனமாக காய் நகர்த்துகின்றது

ஜப்பானுடன் நல்லுறவு, வியட்நாமுடன் பிரம்மோஸ் ஒப்பந்தம் , வியட்நாமில் இந்திய துறைமுகம் என அதன் காலடியில் மிரட்டுகின்றது இந்தியா, நிச்சயம் இது அட்டகாசமான திட்டம்

அப்படியே பாகிஸ்தானில் சீனா கட்டும் துறைமுகத்திற்கு எதிராக ஈரானிலும் கட்டுகின்றது இந்தியா

இப்போது ஓமானின் டக்ம் எனும் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திகொள்ள ஒப்பந்தம் தயாராகிவிட்டது, இது நிச்சயம் இந்தியாவின் வெற்றி

அத்துறைமுகத்தில் இந்தியா கால்பதித்துவிட்டதால் இனி அரபிகடலில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தலாம்

நாளை யுத்தம் என வரும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு படகு கூட செல்லமுடியா நிலையினை உருவாக்கி மடக்கி அடிக்கலாம்

ஒமானும் நீண்ட கடற்பரப்பு கொண்ட நாடு, அது அரபிகடல் ஆப்ரிக்க பகுதி என எல்லாவற்றையும் கண்காணிக்க மகா வசதியான இடம்

இந்திய வியாபார கப்பல்கள் தரித்து நிற்கபோவதால் வியாபார வாய்ப்புகளும் பெருகும்

மோடி இஸ்ரேலுடன் நெருங்குகின்றார் இதனால் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவினை இழப்பார் என்ற கருத்தை பொய்யாக்கி , பாலஸ்தீனம் சென்று அராபத்தின் கல்லறையினை வணங்கிய மோடி அப்படியே அபுதாபியில் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு ஓமானில் இந்த சரித்திர பூர்வ நிகழ்வினை நிகழ்த்திவிட்டார்

அரேபிய பகுதியில் இந்திய ஆதரவினை திரட்டிவிட்ட மோடிக்கு வாழ்த்துக்கள்

உலக அரங்கில் மோடியின் இந்தியா இஸ்லாமியருக்கு எதிரானதல்ல எனும் அபிமானத்தை அவர் பெற்றிருப்பது மகா ஆச்சரியமும் வியப்பும் மகிழ்வும் கொண்டது.

பல லட்சம் இந்திய‌ மக்களுக்கு வாழ்வு கொடுக்கும் அரேபிய நாடுகளின் இந்திய உறவு இவ்வளவு சுமூகமாக இருப்பது நிச்சயம் மகா நல்ல விஷயம், நம்பிக்கை தரும் விஷயம்.

ஒரு இந்தியனாக இதனை வரவேற்று கொண்டாடலாம், இந்த நற்பெயரை தக்கவைக்க வேண்டிய பொறுப்பும் மோடிக்கு இருக்கின்றது

“அந்த மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என பாரதி எழுதிய வரிகளுக்கு வடிவம் கொடுத்த மோடிக்கு சல்யூட்

இம்மாதிரி விஷயங்களில் சாதிக்கும்பொழுது வாழ்த்தாவிட்டால் நாம் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது