பல விஷயங்களை மீட்டெடுத்தல் அவசியம்

பண்டைய இந்தியா அறிவில் சிறந்தும் செல்வத்தில் சிறந்தும் இருந்தபொழுது ஐரோப்பா தரித்திர தேசமாகவும் காட்டுமிராண்டிகளின் கூடாரமாகவும் இருந்தது

இந்தியா அவர்களின் கனவாகவும், அவர்கள் தேடும் சொர்க்கமாகவும் இருந்தது. முதன் முதலில் இங்கு படையெடுத்து வந்தவன் அலெக்ஸாண்டர்

அவனின் தொடர்பு மூலமே இந்திய ஐரோப்பிய இணைப்பு ஏற்பட்டது, இந்திய கணிதமும் தத்துவமும் அங்கே கடத்தபட்டன, திரிகோணமிதி பிதாகரஸ் தியரி எல்லாம் அப்படித்தான் உருவானது

பொதுவாக ரோமருக்கும் கிரேக்கருக்கும் பொருந்தாது கிரேக்கரை வீழ்த்திய ரோமர் தங்கள் எண்கள்தங்கள் அறிவியல் என ஒன்றை கொண்டிருந்தனர், அது , I, II, III, IV, V… இப்படி இருந்தது

இதை வைத்து எந்த கணித சமன்பாட்டை செய்வீர்கள்?

இந்திய கணிதமும் அறிவியலும் நபிபெருமானுக்கு பிந்தைய கலீபாக்கள் காலத்தில் ஐரோப்பாவில் ஊடுருவின அதன் காலம் 8ம் நூற்றாண்டு

அப்பொழுதுதான் ஐரோப்பா இந்திய நம்பர் முறையினையே கண்டது, அதாவது 0, 1,2,3 இந்தியாவின் எண் முறை அரேபியா வழியாக ஐரோப்பாவுக்கு சென்று அரேபிய எண்களானது,

இந்தியாவின் கணிதமுறை அரேபியா வழியாக செல்லும் பொழுது அல்ஜிப்ரா ஆனது

அரேபிய எண்களான இந்திய எண்முறையினை ஐரோப்பா ஏற்றுகொண்ட பின்பே அங்கு விஞ்ஞானம் வளர்ந்தது

நம்புகின்றீர்களோ இல்லையோ 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சமஸ்கிருதம் போதிக்கபட்டது, அதற்கான காரணம் இங்கிருந்து கொண்டு செல்லபடும் நூல்களை படித்து தெரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம் என கருதினார்கள்

எல்லா ஐரோப்பியரும் இங்குவந்து கிடைத்த குறிப்புகளை எல்லாம் கொண்டு சென்று ஏதாவது செய்யமுடியுமா என தேடினார்கள்

அது பல வெற்றிகளை கொடுத்தது, அதாவது இந்திய ஞான, விஞ்ஞான நூல்களை ஐரோப்பாவில் ஆராய்வார்கள், முயற்சி எடுப்பார்கள் ஆனால் வெற்றி அமெரிக்காவில் தொடரும் பொழுது கிடைத்தது

விமானம் கண்டறியபட்டது அப்படித்தான், ஜெர்மானியன் ஒருவனின் விமானபொறியினை விலைக்கு வாங்கி அதில் மாற்றம் செய்தே ரைட் சகோதரர்கள் பறந்தனர்

ஜெர்மானிய எந்திரங்களில் செய்யபட்ட மாறுதலே போர்ட் கார் கம்பெனி ஆனது என்றாலும் ஜெர்மன் கார்களின் தரம் இன்றும் தரமே

ஐரோப்பாவில் ஜெர்மன் இந்தியாவின் அறிவுசெல்வங்களை அட்டகாசமாக பயன்படுத்தியது, அப்படி இந்தியா வந்த ஜெர்மனியானினே ஆதிச்சநல்லூரை சொன்னான், தஞ்சை பெரிய கோவிலை சொன்னான் அப்படியே ஓலை சுவடிகளை அள்ளி சென்றான்

ஹிட்லர் அதில் பல நவீன விஷயங்களை செய்ய முயற்சித்த்தான், இந்திய விமான சாஸ்த்திராவினை கொண்டு அவன் வடிவமைத்ததே பல் வகை விமானம்

இன்றும் அமெரிக்காவில் ஹிட்லருக்கு வெளிகிரகத்தாருடன் தொடர்புடையதாகவும் அதை வைத்தே அவன் அபார வளர்ச்சி அடைந்ததாகவும் கதை உண்டு

விஷயம் ஒன்றுமில்லை அவன் இந்திய ஞான செல்வங்களை கற்று முயற்சித்தான், அட அவன் என்ன ஐன்ஸ்டீனும் ஓப்பன் ஹைமருமே பகவத் கீதை படித்ததை அவர்கள் வரலாறே சொல்கின்றது

ஹிட்லருக்கு பின்பு அமெரிக்காவும் ரஷ்யாவும் அவன் விஞ்ஞானிகளை கொண்டே இன்று காணும் உலகை மாற்றியிருகின்றன‌

ஆம் அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்தில் இருந்தே மேற்குலகம் இந்திய ஓலைசுவடி வேதம் உட்பட பல விஷயங்களை கண் வைத்தது, முடிந்தவரை கடத்தி கொண்டு சென்றார்கள்

பின்பு சமஸ்கிருதம் கற்று படித்தார்கள், அதில் எவ்வளவோ விஷயங்களை உள்வாங்கி விஞ்ஞானம் வளர்த்தார்கள், நாம் நமது அறிவுசெல்வத்தை அவர்களிடம் பறிகொடுத்து அவர்களே உயர்ந்தவர்கள் என மனமார நம்பி நிற்கின்றோம்

அந்த அளவு காலத்தை மாற்றிவிட்டார்கள்

ஆம் அவர்கள் சமஸ்கிருதம் கற்றார்கள், கிரேக்கர் முதல் ரோமர் காலம், பிரிட்டன் காலம், ஹிட்லர் காலம் என இன்றுவரை அவர்கள் இன்றுவரை படிக்கின்றார்கள்

சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழையும் கற்றார்கள் கற்கின்றர்கள், தஞ்சை சரஸ்வதிமஹால் ஓலைசுவடியின் செய்திகள் தமிழனுக்கு தெரியாத அளவு அவனுக்கு தெரிகின்றது

இது தமிழ்நாடு, தமிழர்கள் ஆட்சி, அதுவும் 70 ஆண்டாக தமிழுக்கு தண்டவாளம் முதல் எங்கெல்லாமோ தலைவைத்தவர்கள் ஆட்சி

சரி ஒரு தமிழனை பழம் ஓலைசுவடியினை படித்து அர்த்தம் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்..முடியாது இவர்கள் தமிழ் வளர்த்த லட்சணம் இதுதான்

விஷயம் இதுதான்

இந்திய நூல்களில் ஏராளமான விஞ்ஞான விஷயம் இருந்தது, அது அரேபியா மூலம் ஐரோப்பாவில் பரவியது, அதில் எவ்வளவோ விஞ்ஞான நுட்பங்களை ஐரோப்பா கற்றது, அதற்கு மூலம் இங்கிருந்து கப்பல் கப்பலாக கொண்டு செல்லபட்ட ஓலைசுவடிகள்

சரி, அவை சமஸ்கிருதத்தில் இருந்ததே? எப்படி படித்தார்கள்?

ஆம் அதற்குத்தான் ஐரோப்பாவில் சமஸ்கிருதம் ஒரு மொழியானது படித்தார்கள், அதை லத்தீனில் ஆங்கிலத்தில் மாற்றி தங்கள் கண்டுபிடிப்பாய் சொன்னார்கள்

இன்றும் அங்கு சமஸ்கிருத மொழி கற்பித்தல் உண்டு

தொடக்கத்தில் அங்கு சம்ஸ்கிருதத்தை கற்றுகொடுத்தது பிராமணர்களே

தந்திர கார வெள்ளையன் நுட்பமாய் திட்டமிட்டான், சமஸ்கிருதம் இந்தியாவில் இருந்தால் அது தனக்கு நல்லதல்ல , இந்த ஞானமான விஷயங்கள் இங்கிருந்துதான் சென்றன என்பதை எப்படி மறைக்கலாம்? இந்த விஷயம் தெரிந்தால் இந்தியா தன் பாரம்பரியத்தை தெரிந்து மீட்டெடுத்தால் என்னாவது என்றெல்லாம் அவனுக்கு யோசனை வந்தது

பிராமண இனத்தை வலுவிழக்க செய்தால் அவர்கள் ஒழிவார்கள், சமஸ்கிருதம் ஒழியும், இந்து ஆலயங்கள் ஒழியும் இந்திய அறிவார்ந்த சமூகம் கண்ணிழந்த யானைபோல் ஆகும் என திட்டமிட்டான்

ஆம் அவன் வருவதற்கு முன் இருந்த அமைதி அவன் வந்தபின் இல்லை, பிராமண எதிர்ப்பு சமஸ்கிருத ஒழிப்பு என அடிப்பொடிகளை சமூக புரட்சி என தூண்டிவிட்டான்

நீதிகட்சி, திராவிட இம்சை , வடக்கே சில கோஷ்டிகள் அதை கன கச்சிதமாக செய்தன, காங்கிரஸ் அதை ரகசியமாக ரசித்தது

இப்பொழுது காலங்கள் திரும்புகின்றன, எல்லாமும் மீட்டெடுக்கபடுகின்றன‌

அப்படியே பழைய வேதங்களும் தத்துவங்களும் இன்னும் பலவும் மீட்டெடுக்கபட வேண்டும், அதில் இன்னும் ஏகபட்ட விஞ்ஞானங்களும் மறைபொருளும் மறைந்து கிடக்கின்றன‌

ஐரோப்பியனால் வெளிவந்திருப்பது 5% மட்டுமே இன்னும் 95% மறைபொருள் இங்குதான் இந்து சாஸ்திரங்களிலும் சமஸ்கிருத வேதங்களிலும், பண்டை தமிழ் இலக்கியங்களிலும் பொதிந்து கிடகின்றது

விஞ்ஞானத்தை , வாழ்வியலை, மனவியலை, ஆன்மீகத்தை பக்தி என கலந்து கொடுத்த மதம் இந்துமதம், அதை அறிய சமஸ்கிருதமும் தமிழும் மகா அவசியம்

இங்கு தமிழும் சமஸ்கிருதமும் இளம்வயதில் இருந்தே கற்றுகொடுக்கபட ஏற்பாடுகள் செய்யபடல் வேண்டும், அது வருங்கால அறிவார்ந்த தலைமுறையினை உருவாக்க நல்லது

சமஸ்கிருதம் ஒரு மொழி அதை கற்றுகொள்வதால் ஒன்றும் குறையாது, சமஸ்கிருதம் போலவே தமிழ் இலக்கியங்களிலும் ஏகபட்ட விஷயங்கள் உண்டு

வெள்ளைய பல்கலைகழகங்கள் கற்பிக்கும் சமஸ்கிருத்தத்தை நாம் கற்காமல் இருப்பது மாபெரும் முட்டாள்தனம்

இதை கற்க கூடாது என்பவன் இந்திய எதிரியும் இந்தியாவில் முட்டாள் சமூகம் உருவாக வேண்டும் என நினைக்கும் சக்திகளின் கைகூலிகள் அன்றி வேறல்ல‌

கவனியுங்கள், எவனெல்லாம் சமஸ்கிருதத்தை எதிர்த்திருப்பானோ அவன் உருவாக்கிய சமூகம் மாபெரும் முட்டாள் சமூகமாக சிந்திக்க திராணியற்ற சமூகமாக, ஒரு பிராய்லர் கோழி சமூகமாக உருமாறியிருக்கும்

நல்ல தலைமுறை உருவாக பல விஷயங்களை மீட்டெடுத்தல் அவசியம்

அக்காலத்தில் வடமொழியும் தமிழும் இங்கிருந்த ஞான பண்டிதர்கள் வித்வான்கள் கற்றிருந்தனர் அதனாலே வேதம் முதல் இலக்கியம் வரை பரிமாறிகொள்ளபட்டது, காசி ராமேஸ்வரம் இணைப்பு அப்படித்தான் நடந்தது

தென்னாட்டு ராமானுஜமும், சங்கரரும் இந்தியா முழுக்க அடையாளம் பெற்றது அப்படித்தான், ராம காதையும் பாரதமும் இன்னும் பலவும் இங்கு வந்தது அப்படித்தான்

உண்மையில் இன்று எல்லா நாட்டு ஞானத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ஆங்கிலம் போல அதாவது கிரேக்கம், லத்தீன் போன்றவை அந்நாடுகள் உச்சத்தில் இருக்கும் பொழுது எல்லா நாட்டு மொழி அறிவையும் தன்னில் பதிவு செய்தது போல, அன்றைய அறிவிற் சிறந்த உலகின் எல்லா மொழி , எல்லா நாட்டு பெரும் விஷயங்களை தன்னில் பதிவு செய்ததுதான் சமஸ்கிருதம்

சீன எகிப்து தமிழ் அரேபியா ஆப்ரிக்கா என பெரும் அறிவார்ந்த இனங்களின் மொத்த தொகுப்பாக சம்ஸ்கிருத எழுத்துக்கள் சுவடிகளாக படிந்தன, அவை எல்லாம் பொக்கிஷம்

இப்பொழுது ஆங்காங்கே பாலை நிலத்து மரம் போல ஓரிரு இடங்களில் சமஸ்கிருதம் படிக்கும் குழந்தைகள் பேறுபெற்றவை, அந்த ஆசி எல்லா மாணவருக்கும் கிடைக்க ஆவண செய்தால் இத்தேசம் செழிக்கும்