பழனிக்கு சென்றிருக்கின்றார் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்
பழனிக்கு சென்றிருக்கின்றார் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்
என்னதான் மகன் ஒரு பக்கம் இந்துத்வாவினை ஒழிப்போம் என சொன்னாலும், கணவர் வீரமணியோடு சேர்ந்து பெரியார் வழி என திரிந்தாலும் என் வழி தனிவழி என காரைக்கால் அம்மையார் போல் கிளம்ப்விட்டார் இந்த கோபாலபுரத்து அம்மையார்
அம்மையார் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றார், சும்மா அல்ல அங்கிருக்கும் திமுக பிரதிநிதியின் மனைவியோடு போகர் சன்னதி, பழனியாண்டவர் சன்னதி எல்லாம் சுற்றி சுற்றி வணங்கியிருக்கின்றார்
மகா உற்சாகமாக வந்து முருகனை வணங்கி சென்றிருக்கின்றார் துர்கா, திமுக இது பற்றி தகவல் சொல்லாது கேட்டால் இதெல்லாம் அவரவர் சொந்த உரிமை ஆனால் தமிழர்களுக்கு மதமில்லை, திராவிடருக்கு இந்து மதம் கிடையாது என்பார்கள்
ஆக துர்கா ஸ்டாலின் தமிழச்சியும் அல்ல திராவிடரும் அல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்
சூரன் ஒரு திராவிடன், சூர சம்ஹாரம் ஆரிய திராவிட யுத்தம் என்றெல்லாம் பேசிய கலைஞரின் மருமகள் பழனிமலைக்கு சென்று முருகனுக்கு அரோகரா என வணங்கிவிட்டு வருவதெல்லாம் காலத்தின் விளையாட்டு
எப்படியோ இடைதேர்தலில் மு.க ஸ்டாலினுக்கு விபூதி அடிக்கபட்டது அதை தொடர்ந்து இப்பொழுது பழனி பஞ்சாமிர்தம் வழங்குகின்றார் மனைவி

அடுத்து மொட்டை அடிப்பது யார்? அலகு குத்துவது யாரென்றால் அதை உதயநிதியும் வீரமணியும் வைகோவும் மிக சரியாக செய்வார்கள் போலிருக்கின்றது