பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது

ஸ்டெர்லைட் விவகாரம் இப்ப்பொழுது பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது

அதாவது ஸ்டெர்லைட்டுக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஜெயா என்றால் அதை வளரவிட்டதில் திமுக பங்கும் உண்டு

கலைஞரின் முரட்டு பக்தரான தூத்துகுடி பெரியசாமி, ஸ்டெர்லைட்டுக்கு முரட்டு ஊழியராக இருந்தார், உழைத்தார் சம்பாதித்தார்

அவரின் மகள்தான் கீதா ஜீவன், கடந்த வருடம் வரை இவரின் லாரிகள் ஸ்டெர்லைட்டுக்குள் ஓடியது

இப்பொழுது ஸ்டெர்லைட் விரிவாக்கத்தில் தூத்துகுடி விழித்துகொள்ள கீதா ஜீவன் போராட வந்தார்

சம்பாதிக்கும் மட்டும் ஸ்டெர்லைட்டுடன் வோட்டு வந்தால் மக்களுடன் என்பது அரசியல் கொள்கை, இதை கீதா ஜீவனும் கையாண்டார்

இதனை வசமாக பிடித்த பழனிச்சாமி, திமுகவினர்தான் வன்முறை தூண்டினார்கள் என கீதா ஜீவனை நோக்கி விஷயத்தை திருப்புகின்றார்

இருவரும் மாறி மாறி ஸ்டெர்லைட்டை வளர்த்தார்கள், இன்று மாறி மாறி குற்றம்சாட்டுகின்றார்கள்

நாம் டென்னிஸ் விளையாட்டை பார்ப்பவரை போல இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்