பழனிச்சாமி இதை எப்படி கடக்க போகின்றார்

முன்பெல்லாம் ஜெயா ஆட்சியில் ஒவ்வொரு அம்மாவசையன்றும் அமைச்சர்கள் ஆடிகொண்டிருப்பார்கள், தூங்கவே மாட்டார்கள், நொடிக்கொரு தரம் பி.ஏவிடம் நான் அமைச்சர்தானே? என கேட்டுகொண்டே இருப்பார்கள்

அம்மாவாசை முடியும்வரை அவர்களின் குடும்பங்களும் கடும் பதற்றத்தில் உண்ணாமல் உறங்காமல் தவிப்பார்கள்

சில அமைச்சர்கள் மருத்துவர் சகிதம் அமர்ந்து நாடிதுடிப்பு உட்பட பரிசோதித்து கொண்டிருப்பார்கள், பிஏ அவர்கள் காதோரம் குனிந்து நீர் இன்னும் அமைச்சர் என சொல்லிகொண்டே இருப்பார்கள்

இன்னொருபுறம் கட்சியினர் நாம் அடுத்த அமைச்சர் ஆவோமா? என எதிர்பார்ப்பில் அவர்களும் தூங்காமல் இருப்பார்கள்

அப்படி அடிக்கடி அமைச்சர்களை தூக்கிபோட்டு விரட்டுவதும் திடீரென யாரையாவது அமைச்சராக்குவதுமாக விளையாடுவார் ஜெயா

ஒரு கட்டத்தில் கட்சியின் 128 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக வந்துவிடும் அளவு நிலமை இருந்தது, மியூசிக்கல் சேர் போல விளையாடுவார்கள்

இதனை பார்த்துத்தான் சசிகலாவுக்கு முதல்வர் ஆசையே வந்திருக்கலாம்

அப்படிபட்ட அதிமுகவில் கடந்த 2 வருடமாக அந்த ஆட்டம் இல்லை, எல்லோரும் நிம்மதியாக இருந்தனர்

இந்நிலையில்தான் அமைச்சர் மணிகண்டன் நீக்கபட்டிருப்பது ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றது

மிக குறைந்த நுனிபெரும்பான்மையில் இருக்கும் பழனிச்சாமி இந்தமுடிவினை ஏன் எடுத்தார் என தெரியவில்லை

அவரை நீக்கியதிலே ஒரு அதிருப்தி கும்பல் உருவாகும் அதைவிட ஆபத்து இனி அமைச்சர் பதவி கேட்டு சில கோஷ்டி உருவாகும்

அது அவருக்கு நல்லதல்ல‌

பலவிஷயங்களை அசால்ட்டாக கடக்கும் பழனிச்சாமி இதை எப்படி கடக்க போகின்றார் என்பது இனிதான் தெரியும்