பழமொழி நானூறு : 18
“ஒருவர் உரைப்ப உரைத்தால் அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா
பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய்”
இருவர் ஒரு கருத்துக்காக வாதிடும் பொழுது இருவருமே ஒரே நேரத்தில் பேசி கூச்சலிட்டால் அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை, அது ஒரே நாயினை இருவரும் ஒரே நேரத்தில் வேட்டைக்கு பயன்படுத்துவது போன்றது என்கின்றார் புலவர்
ஒரே நாயினை இருவர் ஒரே நேரத்தில் வேட்டைக்கு செலுத்த முடியாது, ஆளுக்கு ஒரு நாய் வைத்திருப்பதே சிறந்தது, அப்படி இருவர் வாதிடும் பொழுது இருவரும் கூச்சலிடுவதை தவிர ஒன்றும் ஆகாது, ஒருவர் வாதிட்டு முடித்தபின் அடுத்தவர் வாதிடுவதே சிறந்தது