பழமொழி நானூறு : 19

“துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் – முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு”

இருவர் வாதிடும் பொழுது ஒருவன் வினா எழுப்பி பேசி முடித்தபின் இன்னொருவன் பதில் சொல்ல வேண்டும், அதுதான் சரியானது. அது அல்லாது ஒருவன் வினவும்பொழுதே அல்லது அதற்கு முன்னமே இன்னொருவன் பதில் சொல்லி குழப்புவது முழங்காலில் அடிபட்டால் மூக்குக்கு கட்டுபோடுவது போல பொருத்தமற்றது பலனற்றது என்பது பொருள்

கேள்வி அறிந்து அதை முழுக்க விளங்கி பொறுமையாக பதில் கூற வேண்டும் என்பது பாடலின் பொருள்