பழமொழி நானூறு : 20
“கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி
பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்”
அதாவது கற்றார் அவை நடுவிலிருக்கும் கற்றவர்கள், கல்லாத புல்லறிவாற் பேசும் கயவ ரிடத்தே எதுவும் எதிர்மாற்றம் பேசமாட்டார்கள், அவர்கள் நல்லறிவும் நற்பண்பும் அற்றவர்கள் என்பதால் அவர்களை அமைதியாக கடந்து செல்வார்கள்
இதனை “பரிசழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்” எனும் பழமொழி சொல்லும், அதாவது தேவர்கள் கூட பழிகொண்ட புல்லறிவுகளோடு தொடர்பு வைத்து கொள்ள் மாட்டார்கள் என்பது
இதுவே “துஷ்டனை கண்டால் தூர விலகு” என்றும் ஆயிற்று, சுத்தமான கோவில் யானை சாக்கடையில் இருந்து வரும் மிருகத்தை கண்டு ஒதுங்கி செல்லும் என்பதும் இதுவேதான்