பழையன கழிதலும் புதியன புகுதலும்

இன்றிருப்பது மெக்காலே விட்டு சென்ற பள்ளிகல்வியின் தொடர்ச்சி, மனப்பாடம் செய் அப்படி மனதில் பதிந்ததை அப்படியே கொட்டு வேறெதுவும் செய்யாதே என்ற கல்விமுறை

சுதந்திர இந்தியாவில் மேற்கல்விக்கு அதாவது கல்லூரி கல்விக்கு ஏகபட்ட மாற்றங்களை செய்தோமே தவிர அடிப்படை கல்வி மெக்காலே சிஸ்டத்தில் இருந்து மாறவே இல்லை

இதை வெளிநாட்டு மாணவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் எளிதாக காணலாம்

வெளிநாட்டு பள்ளிமாணவர்களிடம் திறமை இருக்கின்றதோ இல்லையோ ஒரு தெளிவும் தைரியமும் மின்னும்

நமது மாணவர்களிடம் ஒரு தயக்கம் தெரியும், சுயமான சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இருக்காது ஆனால் திறமை உள்ளூர மறைந்திருக்கும்

இந்த புதிய கல்விமுறை மாணவர்களை மனப்பாட கொடுமையில் இருந்து விலக்கி சுயமாக சிந்திக்க வைக்கும் முறை

பல நாடுகளை கவனிக்கின்றோம், அங்கு இங்கு இருப்பது போல 12 வரை Standard எனப்படும் வகுப்பு இல்லை

6 வரைதான் வகுப்புகள் அதன் பின் தரம் எனப்படும் பார்ம்1, பார்ம்2 என பிரிகின்றன‌

அப்படியே மேற்கல்விக்கு மிக அழகான வழிகாட்டுதல் கிடைக்கின்றது

இந்த புதிய கல்விமுறை வரைவும் பல விஷயங்களை கோடிட்டு காட்டுகின்றது குறிப்பாக மொத்தமாக ஆண்டு இறுதியில் கொட்டும் தேர்வுகளுக்கு பதிலாக மிக எளிய தேர்வுகள் செமஸ்டர் தேர்வுகள் அதுவும் மாணவர்கள் விரும்பிய நேரம் எழுதலாம் என்ற அளவு சுதந்திரம் இருக்கின்றது

புத்தக மூட்டை சுமந்து, 24 மணிநேரமும் புத்தகங்களோடு போராடி இன்னும் விருப்பமில்லா பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்யும் இம்சையிலிருந்து அவர்களுக்கு விடுதலை

மொழிக்கு இரண்டு தாள்கள், Long Essay மனப்ப்பாடம் இன்னும் என்னவெல்லாமோ மனப்பாடம் எனும் கொடுமை, ஒவ்வொரு பாடத்திற்கு தலையணை அளவில் இரண்டு வால்யூம் எனும் கொடுமை எல்லாம் குறையும்

மாணவர்களை சுயமாக சிந்திக்கவிடாமல் கண்டதையும் மனப்பாடம் செய் என்ற முறையில் இருக்கும் கல்விமுறையினை மாற்றி மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் மேல்நாட்டு,சிங்கப்பூர் ஜப்பானிய கல்விமுறை போல மாறவைக்கும் திட்டமே புதிய கல்வி முறை

வருங்காலத்தில் திறன்மிக்க மாணவ சமூகத்தை உருவாக்க அது மகா அவசியம், அதைத்தான் அரசு திட்டவரைவாக செய்திருக்கின்றது

உலக முன்னேறிய நாடுகளின் கல்விமுறையினை கவனித்தால் இது அவசியம் தேவை என்பதை உணரலாம்

மாறாக திராவிட , சினிமா அழிச்சாட்டிய கும்பலின் ஒப்பாரியினை மட்டும் கேட்டால் ஈழம் அழிந்தது போல, தமிழகத்தின் திட்டமிடாமல் உருவாக்கபட்டு இன்று திறமையில்லாமல் உருவாக்கபட்டு வேலையின்றி திரியும் பொறியியல் பட்டதாரிகளை போல , இன்னும் மற்ற பட்டதாரிகளை போல பெரும் குழப்பமும் வெறுமையுமே மிஞ்சும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே..” என்றவனும் தமிழனே..