பாகிஸ்தானில் நீதிமன்றம் மோசமானதாய் இருக்கின்றது
பாகிஸ்தானில் மத அடிப்படைவாதிகள்தான் ஒருமாதிரி என்றால் நீதிமன்றம் அதைவிட மோசமானதாய் இருக்கின்றது
முஷாராப் நாட்டுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவருக்கு தூக்கு தண்டனையாம், பின் 3 நாள் அவர் உடல் நடுதெருவில் தொங்க வேண்டுமாம்
3 நாள் ஒரு பிணம் தொங்கமுடியுமா? அதுவும் நடு ஊருக்குள் என்றால் எப்படி?
அவர் தண்டனைக்கு முன்பே செத்தாலும் பரவாயில்லை அவர் செத்த உடன் தொங்கவிட வேண்டுமாம்
அது என்ன மாதிரி நாடு என்றே தெரியவில்லை, ஆளாளுக்கு ஒவ்வொரு ரகம்
அந்த துரோகி ஜின்னா தான் சாகும்பொழுது சொன்னான் “நான் செய்த பெரும் தவறு பாகிஸ்தானை உருவாக்கியது”
அது மிக சரியாக இருக்கின்றது, என்ன இருந்தாலும் அனுபவத்தில் வந்த வார்த்தை அல்லவா?
தீர்ப்பின் விவரத்தை படித்தால் நமக்கே முஷ்ஷிடம் “யோவ் இப்பவே சுட்டுகிட்டு சாவுய்யா,,” என சொல்லலாம் போலிருக்கின்றது
எனினும் பாகிஸ்தான் முஷாரப்பை தூக்கில் போட்டுவிடுமா? முடியுமா?
முஷாராப்புக்கு ஒன்று என்றால் ராகுல்கேந்தியும் அவரின் சர்வாதிகார கூட்டாளிகளும் இந்தியாவினை சும்மா விடுவார்களா என்ன?
விரைவில் முஷ்ஷூக்கு இங்கு அரசியல் அடைக்கலம் கொடுக்கவேண்டும் என குரல்வந்தாலும் வரும்