பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது.
பாகிஸ்தானும் கொரோனாவுக்கு தப்பவில்லை, ஆனால் காட்சிகள் மானிட நேயத்தை சாகடிக்கின்றன, அந்நாடு எப்படிபட்ட முரட்டு நாடு என்பது உலகுக்கு தெரிகின்றது
ஆம் அங்கு மைனாரிட்டி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்டு
இப்பொழுது அங்கும் ஊரடங்கு வீட்டுக்குள் அடைப்பு, ஆனால் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உதவியும் உணவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதில்லை
இந்திய திருநாடு மசூதியில் அடைபட்ட கூட்டத்தையும் அவர்களில் இருந்து தப்பி ஓடியவரையும் தேடி பிடித்து நீங்களெல்லாம் இந்தியர்கள் என மத வேறுபாடு இன்றி தேடி பிடித்து காத்து கொண்டிருகின்றது
ஆனால் பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது
பாகிஸ்தானின் சமூக ஆர்வலர் ஆயுப் மிர்ச சொன்னதை அப்படியே சொல்கின்றோம்
” சிறுபான்மை இந்து சீக்கிய மக்கள் உணவு கிடைக்காமல் நெருக்கடி நிலையில் உள்ளனர். அவர்களால் வெளிவர முடியவில்லை. வீட்டிலும் உணவு இல்லை
இந்திய அரசாங்கம் ராஜஸ்தான் வழியே சிந்து பகுதிக்கு உணவு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க காலதாமதம் செய்யாமல், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஐ.நா. அமைப்பு தலையிட வேண்டும்
இப்பொழுது இந்த குடியுரிமை இம்சை போராளிளை நோக்கி கேட்கின்றோம்
ஏ போராளி இம்சைகளே, இனி அந்த இந்து மக்கள், கிறிஸ்தவ மக்கள் பசியால் வாடி அடைகலம் தேடினால் எங்கு வருவார்கள்?
அண்டை நாடு என ஆப்கன், ஈரான் என இருக்கும் நிலையில் அவர்களுக்கான ஒரே புகலிடம் எது?
அந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் எங்கு செல்வார்கள்? இங்கேதான் வருவார்கள். அப்படி வரும்பொழுது இத்தேசம் கதவை திறக்காமல் என்ன செய்யும்?
இஸ்லாமியரை அரவணைக்க நாங்கள் இருக்கின்றொம் இந்துக்கள் எப்படியும் போகட்டும் என அந்நாடு விரட்டும் பொழுது ஒதுக்கும் பொழுது அவர்களுக்கான வழி என்ன? ஆறுதல் என்ன?
இதைத்தான் குடியுரிமை சட்டம் தெளிவாக சொல்கின்றது, இது 1947ல் இருந்து இருக்கும் நிலை, கொரோனா அதை தெளிவாக சொல்கின்றது
இனியும் திருந்தாவிட்டால் கொரொனாவினை விட நீங்களே தேசத்துக்கு ஆபத்தானவர்கள்