பாகிஸ்தான் பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம்

இந்த பாகிஸ்தான் என்பது அமெரிக்காவுக்கு மிக நன்மையான விஷயமோ இல்லையோ பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம்

ராமருக்கு பின் அவர்களுக்கு பிடித்தமான விஷயம் பாகிஸ்தான்

1947 முதல் பாகிஸ்தானிய எல்லை மாறவே இல்லை, அதுவும் 1972ல் அதன் கிழக்கு எல்லையினை இந்தியா திருத்தி எழுதியது அதுவும் காங்கிரஸ் ஆட்சி

இங்கு பாகிஸ்தானால் வரகூடிய ஆபத்துக்களை தடுக்க வலுவான அஸ்திவாரம் அன்றே போடபட்டாயிறு , ஏவுகனை முதல் அணுகுண்டு வரை செய்தாயிற்று

பாதுகாப்புக்கான கருவிகளை கோர ராணுவமும் அதற்கு உதவ ISRO DRDO HAL போன்ற அமைப்புகளும் முழு வீச்சில் இயங்குகின்றன‌

அரசு செய்ய வேண்டியது ராணுவத்திற்கும் அதுசார்ந்த துறைகளுக்கும் அள்ளி கொடுத்தாலே போதும் குறைந்தபட்சம் அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்தாலே போதும்

உதாரணமாக மிக் 35 விமானம் நல்லதா இல்லை எப் 21 விமானம் நல்லதா என்றால் அது ராணுவத்திற்குத்தான் தெரியும், அதற்கு செவிசாய்த்தால் போதும்

பாதுகாப்பினை ராணுவம் பார்த்து கொள்ளும்

நாட்டுக்கு முக்கியமான விஷயம் பொருளாதாரம், வளரும் நாடு எனும் வகையிலும் பெரும் செலவுகள் இருப்பதாலும் இங்கு அதைத்தான் பெருக்க வேண்டும்

அதை பெருக்கினால்தான் பாகிஸ்தானை சமாளிக்க டைபூன் முதல் யூரோபைட்டர், ரபேல் என வாங்க முடியும்

பொருளாதாரம் வளர இங்கு ஒற்றுமை சமாதான சூழல் நிலைத்தன்மை முக்கியம்

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் அடித்துகொண்டோ இல்லை கலவர சூழலில் இருந்தாலோ ஒன்றும் நடக்காது

வீணாக பாகிஸ்தான் அது இது என சொல்லிகொண்டே இராமல் நாட்டுக்கு சென்ன செய்தோம் எப்படி பொருளாதாரம் காத்தோம் எப்படி மக்களின் வாழ்வாதார நிலையினை உயர்த்தினோம் என பாஜக சொன்னால் நலமாக இருக்கும்

ஆனால் அப்படி ஒருவரும் பேச காணோம்,

சும்மா பாகிஸ்தான் ராமர் என சொல்லிகொண்டிருப்பதால் இங்கு ஒரு மாற்றமும் நிகழாது

பாகிஸ்தானை சமாளிக்க ராணுவம் இருக்கின்றது, பொருளாதாரத்தை கவனிக்க யார் இருக்கின்றார்கள்?

நாட்டின் அமைதியினை நிலைநாட்டி வளப்பத்தை கொண்டுவர யார் இருக்கின்றார்கள்?

பாஜகவால் மத நெருக்கடி இன்னபிற நெருக்கடி பாகிஸ்தான் நெருக்கடி என்றால் அது இல்லா இடத்தில் நிலை இல்லா ஆட்சி ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுப்பது மாதம் ஒரு பிரதமர், குறிப்பிட்ட துறையினை கேட்டு கூட்டணி கட்சி அடம் அதில் ஊழல் என ஏக சிக்கல் வரும்

பாஜகாவால் ஒருவித நெருக்கடி என்றால் அது இல்லா இடத்தில் ஏகபட்ட நெருக்கடி..

இதை எல்லாம் கவனித்தே மக்கள் வாக்களிக்க வேண்டும்

பொறுப்பு எல்லா தரப்புக்கும் வேண்டும் பாஜக உட்பட‌

பாகிஸ்தான் ராமர் என சொல்லிகொண்டிருப்பதால் இங்கு ஒரு மாற்றமும் நிகழாது