பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை
நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை
அதாவது இவ்வளவு நாளும் அமெரிக்காவும், சீனாவும் கொடுத்த தர்ம பணத்தில் அந்நாடு இயங்கி இருக்கின்றது
சீனா வட்டிமேல் வட்டி கேட்டு இம்சிக்க, அமெரிக்கா தன் நிதி உதவியினை நிறுத்த, தவிக்கின்றது பாகிஸ்தான்
அரசை நடத்தவே பணம் இல்லா பொழுது உங்களுக்கு எதற்கு அணுகுண்டு, ஏவுகனை எல்லாம்? அதை எல்லாம் கடலில் போடுங்கள்
இப்பொழுதும் திவாலானதாக அறிவியுங்கள், பாகிஸ்தான் நிவாரண நிதி என கொட்டி கொடுக்க இந்திய மக்கள் ரெடி
அதன் பின்பாவது இந்த தீவிரவாதத்தை நிறுத்திவிட்டு திருந்துங்கள்
மிஸ்டர் இம்ரான், உங்களால் எம் தேசம் எல்லையில் கொட்டும் பணம் கொஞ்சமல்ல. வேண்டுமானால் அதில் ஒரு பகுதியினை தருகின்றோம் அதற்கு பதிலாக இந்த தீவிரவாதிகளை உருவாக்காமல் காஷ்மீரில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் சரியா?
அப்படியானால் இரு பக்கமும் கணக்கு சரியாகும்
—————————————————————————————————————————————–
பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது – ராஜ்நாத் சிங் கருத்து
ஆமாம், ஒருவேளை அது தன் இயல்பை மாற்றிகொண்டால் இவர்கள் அரசியல் என்னாவது?
அதனால் பாகிஸ்தான் திருந்தவே கூடாது என்பதுதான் இவர்களின் பெரும் அக்கறை
சீனாவினை விடவே கூடாது என முடிவில் இருக்கும் டிரம்ப் அதற்கான வரிகளை மேலும் இறுக்குகின்றார்
இதனால் இன்னும் தொடர்ந்து சீன பொருட்கள் சல்லி விலையில் உலக சந்தையில் கிடைக்கும் என்பது உறுதியில்லை
இனியும் சீனாவால் தொடர்ந்து மிக குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது, விலை எகிறும்
உலக வாணிப பெருந்தலைகள் எதிர்பார்த்தது இதனைத்தான், சீனாவின் சல்லி விலை சந்தையினை அடித்து வீழ்த்தவேண்டும் என்பதுதான்
அதே நேரம் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவணம் வெளியேறும் பட்சத்தில் அமெரிக்க ஐபொன் முதல் பல பொருட்களின் விலையும் எகிறும்
இது உலகம் முழுக்க பாதிப்பினை கொண்டுவரும்
இந்தியாவில் சும்மாவே விலைவாசி அதிகம், இந்த மோதலால் இனி என்னவெல்லாம் உயருமோ தெரியாது
இங்கிலாந்து செயற்கைகோளுடன் இன்று [ September 16, 2018 ] பறக்கின்றது இந்திய ராக்கெட்
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுங்கள் என சொன்னபொழுது “இந்தியருக்கு என்ன தெரியும்? குண்டூசி கூட செய்ய தெரியாது.” என நக்கல் செய்தவர் சர்ச்சில்
“இந்திய தயாரிப்பா? அது என்றைக்கு உருப்படியாக இருந்தது? வேலை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாதே?” என மிக மட்டமாக பேசியவர்கள் இங்கிலாந்து மக்கள்
இன்று அவர்களின் செயற்கை கோளினை சுமந்து செல்லும் ராக்கெட்டை தயாரிக்கும் அளவு இந்தியா வளர்ந்திருக்கின்றது
எவ்வளவு மகத்தான சாதனை?
பிரிட்டனின் காலடியில் இருந்த எத்தனையோ நாடுகளில் இந்தியா மட்டுமே இச்சாதனையினை செய்திருக்கின்றது
நாமும் உலக அரங்கில் வளர்ந்திருக்கின்றோம், விஞ்ஞான வித்தைகளுக்கு யாருக்கும் சளைக்காமல் வளர்ந்திருக்கின்றோம் என்பதற்கு இந்த சாதனை மாபெரும் எடுத்துகாட்டு
தேசம் இந்த மாபெரும் சாதனையில் பெரு மகிழ்ச்சி கொள்கின்றது