பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் கதையாம்….
பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் “காவிய தலைவன்” படத்து கதைதான்.
பிரித்விராஜ் பாத்திரம் ராணாவிற்கும், சித்தார்த் பாத்திரம் பிரபாசுக்கும்,, நாசர் பாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கும், வேதிகா பாத்திரம் அனுஷ்காவிற்குமாக மாற்றி அமைக்கபட்டுள்ளது
அதே நாடக கம்பெனி கதையினை அரசு கதைக்கு மாற்றி வெற்றிபெற்றுவிட்டார்கள், இப்படி எங்கள் ஜெயமோகன் கதையினை திருட பெரும் கும்பலே கிளம்பிவிட்டது என ஜெயமோகனின் பக்த கோடிகள் ஒரே சத்தமாக போட்டுகொண்டிருக்கின்றார்கள்
இதற்கு அன்னார் இன்னும் பதிலளிக்கவில்லை, அப்படி பதிலளித்தால் கிட்டதட்ட 4000 பக்கங்களுக்கு பதிலளிப்பார் அதனை நினைத்தால்தான் பகீரென்கின்றது..