பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை
பாக்கியராஜ் தவறாக ஒன்றும் சொல்லவில்லை, இந்த காலத்தில் பெண்கள் போன் இணையம் என எல்லா வெளியிலும் பழகுகின்றார்கள், அப்பொழுது தங்கள் பாதுகாப்பை மறந்து பொள்ளாச்சி போன்ற விவகாரங்களில் சிக்குகின்றார்கள்
இந்த பொல்லா உலகில் பெண்கள்தான் தங்களை காத்துகொள்ள வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தில் தானே சிக்கிய பெண்கள் உண்டு என சொல்லியிருந்தார்
இதில் தவறு இருப்பதாக யார் சொல்லமுடியும்?
உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கின்றார் பாக்யராஜ்
நம் சமூகம் வித்தியாசமான அமைப்புடையது, மேல் நாட்டை போல பெண்களை சமமாக நடத்தும் மன நிலைக்கு இச்சமூகம் வரவில்லை எளிதில் வராது
அந்த சமூகத்தில் மேல்நாட்டவர் போல் சோஷியல் மீடியா பயன்படுத்தும் பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம்
இதை டி.ஆர் பாணியில் சொல்வதாக இருந்தால் “முள்மேல் சேலை பட்டாலும், சேலையில் முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தாம்மா தங்கச்சி.. நம்ம சேலைய நாமதாம்மா கவனமா பார்த்துக்கணும்..”