பாஜகவினை அசைக்க முடியாது

அந்த கட்சி 1984ல்தான் ஆரம்பிக்கபட்டது, முதலில் கிடைத்தது வெறும் இரு இடங்களே

ஆனால் அடுத்த 14 வருடத்திலே மத்தியில் கூட்டணியில் ஆட்சிக்கு வந்தது, அதை அன்று தாங்கிபிடித்தது திமுக‌

அடுத்த 10 வருடங்களில் அசுரபலத்தோடு அமர்ந்தது, அடுத்த 5 வருடத்தில் இன்னும் பலம்

இப்பொழுது 1984ல் தான் இருந்த இடத்துக்கு காங்கிரஸை அது அனுப்பியிருப்பது சாதாரணம் அல்ல‌

விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, தேசம் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்றை மிக சரியாக பிடித்திருக்கின்றார்கள்

அதில்தான் காங்கிரசும் காலி, மாநில கட்சிகளும் சோலி சுத்தம்

தவறு நடந்திருப்பது காங்கிரஸிடமும் அதன் இம்சை கூட்டணிகளுடமும்

அதை சரிசெய்யாவிட்டால் இன்னும் 50 வருடங்களுக்கு பாஜகவினை அசைக்க முடியாது

தேசம் ஆப்கன் அளவுக்கு சென்றாலும் இங்கு பாஜகதான் அசைக்கமுடியா சக்தியாக இருக்கும்

அதைத்தான் சசிதரூரும் சொல்கின்றார் ஜெயராம் ரமேஷும் சொல்கின்றார், நாமும் சொல்கின்றோம்