பாஜக விளம்பர கோஷ்டி
பாஜக விளம்பர கோஷ்டி என்பது இந்த அரசில் அல்ல அது வாஜ்பாய் அரசிலே தெரிந்தது
வீண் விளம்பரத்திற்கு 1998 அணுகுண்டு வெடித்து பொருளாதார தடை தேடினார்கள், நாடுபட்ட சிக்கல் கொஞ்சமல்ல
திருந்தா தேசம் என ஒதுக்கி வைத்த பாகிஸ்தானுக்கு விளம்பரத்திற்கு பஸ் விட்டார்கள், பூரா பயலும் அதில் ஏறி கார்கிலில் வந்து பதுங்கினான் அதன் பின் பஸ்ஸை நிறுத்திவிட்டு போருக்கு சென்றார்கள்
ஒவ்வொரு செயலிலும் விளம்பரத்தை அந்த அரசு செய்தது கொஞ்சமல்ல
மோடி விளம்பரத்திற்கு வாஜ்பாய் அரசுதான் முன்னோடி, விளம்பர அரசை தொடங்கியதே அவர்கள்தான்
ஆனால் இன்று மோடி வெற்று விளம்பரம் என கொக்கரிக்கும் திமுக, அன்று அமைதியாய் இருந்தது. அன்று வாஜ்பாய் செய்ததைத்தான் இன்று மோடியும் செய்கின்றார்
ஆனால் அன்று அமைதி , இன்று அலறல் ஏன்?
ஆம், அந்த வாஜ்பாய் ஆட்சியில் திமுக இருந்தது, அதற்கு அமைச்சர்களும் இருந்தனர்.