பாட்மிட்டன் வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை படமாக்கபடுகின்றது

பாட்மிட்டன் வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை படமாக்கபடுகின்றது

காற்றுள்ள போதே தூற்றிகொள் என்பது போல இப்பொழுதெல்லாம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக்கபட்டு வருகின்றது

அது என்னவோ தெரியவில்லை அரசியல் தலைவர்களின் வாழ்க்கை இப்பொழுதெல்லாம் வருவதில்லை, ஜெயா கதையினை எடுத்து கொண்டிருக்கின்றார்கள் அது நல்லமுறையில் வருமா என்பது தெரியவில்லை

கலைஞர் கருணாநிதி கதையினை எடுக்கலாம், அதற்கு தகுதியான நபர் என நாசர் அல்லது பிரகாஷ்ராஜ் என இருவரை சொல்லலாம்

இருவரும் இல்லையென்றால் மம்முட்டி நல்ல தேர்வு

இவர்கள் மூவரில் ஒருவரை தவிர இப்போதைக்கு அந்த கனமான பாத்திரத்தை யாராலும் சுமக்கமுடியாது

பாட்மிட்டன் வீராங்கனை சிந்து படத்தில் சமந்தா நடிக்கின்றார், ஆனால் சிந்துவின் விருப்ப்பம் தீபிகா படுகோனே

நம்மிடம் கேட்டால் சிந்துவே நடிக்கலாம் எதற்கு இன்னொரு நடிகை?

ஆனால் தீபிகா படுகோனே பிரபல பாட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனே மகள் என்பதால் அவர் நன்றாக பொருந்துவார் என்கின்றார் சிந்து

அது சரியாக இருக்கலாம், தீபிகா முறைப்படி முதலில் பாட்மிட்டன் ஆடினார் அதன் பின்புதான் கேமரா முன் ஆட வந்தார்

தலைவி குஷ்பு பாட்மிட்டன்வீராங்கனை வேடத்துக்கு சரியாக பொருந்துவார் , பிரம்மா மற்றும் சிங்கார வேலன் போன்ற படங்கள் அவரின் டென்னிஸ் ஆட்டத்துக்காக மட்டுமே ஓடின‌

தலைவி நினைவு சிந்துவுக்கு ஏன் வரவில்லை என தெரியவில்லை, விவரமில்லா பிள்ளைபோலிருக்கின்றது

விரைவில் ஜெர்மனின் ஏஞ்சலா மெர்கல் கதை சினிமாமாக எடுக்கபடலாம் என்கின்றார்கள், தாட்சருக்கு பின் ஐரோப்பாவினை ஆட்டிவைக்கும் பெண் அதிபர் அவர்தான்

அவர் கதையினை படமாக எடுக்கும் பட்சத்தில் தலைவியினை நடிக்க வைக்க ஹாலிவுட்டே சென்னைக்கு வந்து கெஞ்சும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை