பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா?
என்னது பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா?
இது என்னடா புது சோதனை?
நேற்று ராசா எல்லாம் என் அட்மினால் வந்த சிக்கல் என்றார், இன்று பாண்டே நீக்கபட்டிருக்கின்றார். ஆக ஏதோ நடக்கின்றது
இந்த ராசா சர்மா, பாண்டே எல்லாம் தமிழர்கள் அல்ல, மாறாக வடநாட்டவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் இல்லை
இந்துத்வா கொள்கையின்றி இவர்கள் இங்கு நிலைக்க முடியாது என்பதால் ரகசிய இழை ஓடியிருக்கலாம் என்கின்றன செய்திகள்
ஆக ராசாவிற்கு எழுந்த எதிர்ப்பில் பாண்டே மாண்டே போனார்.
ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது என செய்திகள் வருகின்றன, லஞ்ச ஊழல் புகார் என்கின்றார்கள்
இதுபற்றி இப்பொழுதுதான் புகார் வந்ததாம், அங்கிள் சைமனை பிடித்து வைத்து இவர் மொக்கை கேள்வி கேட்டதென்ன? அதற்கு அவர் ஆடிய தாண்டவமென்ன
கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தபொழுது அதனை கேட்காமல் சைமனுக்கு சாதகமான கேள்விகளை கேட்டபொழுதே இவர் மீது சந்தேகம் வந்தது
இன்று அது சரியாகிவிட்டது
நன்றாக விசாரித்தால் இவருக்கு முதலில் லஞ்சம் கொடுத்து கெடுத்த நபர் சைமனாகவே இருப்பார்
பாண்டேக்கு லஞ்சம் கொடுக்க முயன்றாரா தினகரன்? : செய்தி
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை
அங்கே பெங்களூரில் சசிகலா சிறைசுகவாசத்திற்கு லஞ்சம் கொடுத்தார் என்ற சர்ச்சை வேறு
ஆர்.கே நகரில் அள்ளிகொடுத்தது உலகிற்கே தெரிந்தது, எல்லா விஷயத்தையும் லஞ்சத்தால் சாதிக்கலாம் என நம்புவார்கள் போல
சொந்தமாக ஜெயா டிவியிருக்க தினகரன் ஏன் இங்கே வந்தார்?, தங்கள் டிவியினை நாயும் பார்க்காது என அவருக்கு தெரிந்திருக்கும் போல
24 மணி நேரமும் தியாக தலைவி சின்னம்மா என சொல்லி பன்னீர் மீது மண் அள்ளிபோட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்? பின் இப்படி அடுத்த டிவி பின்னால் அலைய வேண்டியதுதான்
இனி என்னாகும்?
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என பாண்டே சிரித்துகொண்டே ஜெயாடிவியில் இணையலாம், அங்கும் சீரியசாக கேள்விகள் கேட்கலாம்
ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் இத்தனை ஆயிரம் வாங்கினீரா பாண்டே என எதிராளி கேட்டுவிட வாய்ப்பு மிக அதிகம்