பாரதத்தின் ஞான குறியீடாக இருந்தது தாமரை

பாரதத்தின் ஞான குறியீடாக இருந்தது தாமரை, அதன் இழதழ்கள் விரிவது ஆத்மாவினை குறித்தது. சேற்றில் அது மலர்ந்து கிடப்பது சில தத்துவங்களை சொன்னது

சேற்றில் இருந்து தாமரை உதிப்பது போல, குழப்பமும் பேராசையும் இன்னும் பல இழிகுணங்களும் கொண்ட மானிட வாழ்வில் இருந்து ஒருவன் ஆத்மா மேலெழுந்து பரம்பொருளை தேடவேண்டும் என சொல்லிற்று இங்குள்ள தர்மம்

அதனால்தான் இந்துக்களின் ஞானம் வழங்கும் தெய்ங்கள் தாமரை மலர்மேல் அமர்ந்தன, தெய்வ குறியூடாக அது காட்டபட்டது

ஆலயங்கள் அமைப்பிலும் இன்னும் பல குறியீடுகளிலும் அது தனி இடம் பெற்றது, இன்னும் விஷெசமாக பற்றற்ற வாழ்க்கைக்கு தாமரை இலையே குறியீடாயிற்று.

இந்துக்களின் வாழ்வியலிலும் ஆலயத்திலும் பெரும் இடம் பிடித்த அந்த மலர் அப்படியே புத்தனின் கைக்கும் சென்றது

சேறுமிக்க இடத்தில் அழகிய தாமரை வருவது போல, சேறான மனிதவாழ்க்கையில் தெய்வீகம் பூக்க வேண்டுமென புத்தரும் அதை சுமந்தார்

இன்று புத்த விகாரையிலும் வழிபாட்டிலும் அது முக்கிய இடம் வகிக்கின்றது

இந்துமதம் மற்றும் அதன் கொள்கைகளில் இருந்து உருவான புத்தமதம் போன்றவற்றின் சாயலில் தாமரைக்கு இன்றும் சிறப்பான இடம் உண்டு

மலர்களில் தாமரை பெற்றிருக்கும் தனி இடம் போல் இன்னொரு மலர் ஆசியாவில் பெறவில்லை பெறவும் முடியாது.

இந்திய பாரம்பரியத்திலும் வழிபாட்டிலும் ஞான அடையாளமாக கருதபட்ட தாமரை தமிழிசை அக்காவின் கைகளில் சிக்கி படாதபாடு பட்டது

இப்பொழுது அது விடுதலையாகிவிட்டது