பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார்

Image may contain: 2 people

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார். அவரை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளில் கவனிக்கவேண்டிய செய்தி இதுதான், இந்திய பாலஸ்தீன உறவுகள் அப்படியானவை

இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா நெடுங்காலம் அங்கீகரிக்கவே இல்லை, பாடபுத்தகங்களில் கூட பாலஸ்தீனில் இயேசு பிறந்தார், பாலஸ்தீன ஜெருசலேம் மசூதி என்றுதான் வார்த்தைகள் இருந்தன‌

இன்று இந்தியாவில் பாலஸ்தீன் நாடு எனும் வார்த்தை கேட்க முடியுமா? எல்லா இஸ்ரேல் என மாறிற்று? எப்படி?

ஊடகங்கள் நினைத்தால், அதிகாரிகளை வளைத்து பாடபுத்தகங்களை வளைத்தால் பாலஸ்தீன பெயரினையே மாற்றிவிடலாம், நம் கண்முன்னாலே மாற்றிவிட்டார்கள், எல்லாமே இஸ்ரேல் என்றாகிவிட்டது…

அன்று இந்திராவிற்கும், ராஜிவிற்கும் நல்ல தோழனாக அராபத் திகழ்ந்தார். ராஜிவ் பாதுகாப்பு குறித்து அவர் எச்சரித்தது, ராஜிவ் கொல்லபட்டபோது ஓடிவந்து அழுததும் வரலாறுகள். அராபத்தின் அலுவலகம் டெல்லியில் கூட இருந்த காலம் உண்டு

அராபத்தும் அற்புதமான தலைவன், ஈழபோராளிகளுக்கு கூட தொடக்க காலத்தில் அற்புதமான பயிற்சிகளை அவர் வழங்கியிருந்தார், அவர்கள் அற்புதமான போராளிகள்

உலகம் அறியா பிரபாகரன் போராட வந்தவுடன் செய்த முதல் வேலை, அராபத் உருவாக்கிய அந்த அற்புத போராளிகளை கொன்றது, ஏன் கொன்றார் என்றால் பிரபாகரன் யாரின் கைகூலி எனும் கேள்விக்கு செல்ல வேண்டியிருக்கும்

அதாவது அராபத் பாணியில் ஈழபோராட்டம் அமைந்து அது வெற்றிபெற கூடாது என யாரோ சிந்தித்திருக்கின்றார்கள்…

இந்திய பாலஸ்தீன உறவில் ராஜிவிற்கு பின் காட்சிகள் மாறின, பாலஸ்தீனத்தை இந்தியா புறக்கணித்தது, ஒரு கட்டத்தில் மறந்தே விட்டது

இன்று வரலாறு திரும்புகின்றன, உலகில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு இனத்திற்கு இந்தியா ஆதரவளிப்பது வாழ்த்துகுரியது

பாலஸ்தீன போராட்டத்தை போல இன்னொரு போராட்டம் இருக்க முடியாது, அவர்கள் எதிர்த்தது இஸ்ரேல் எனும் பெரும் அரக்கனை, நிச்சயம் வெற்றி பெறமுடியாது

ஆனால் அராபத் அற்புதமாக வழிநடத்தினார், தனிநாடு இல்லை என்றபொழுது சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், எல்லைகளை நிர்ணயித்தார், ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தினார், ஹமாஸ் அதில் அதிருப்தியில் பிரிந்தாலும் இன்றுவரை பாலஸ்தீனத்திற்கு ஒரு எல்லை கோடு உள்ளது, நிர்வாகம் உள்ளது

சில ஐரோப்பிய நாடுகளே சுதந்திர பாலஸ்தீனம் என பேச தொடங்கியாயிற்று, அந்த அளவிற்கு அடித்தளம் கொடுத்தார் அராபத்,

ஈழசிக்கலும் இப்படித்தான், இந்தியா இந்த திட்டத்தைத்தான் புலிகளுக்கு சொன்னது, உங்களுக்கு இப்பொழுது ஒன்றுமில்லை, ஒரு சமரச திட்டத்திற்கு வந்து எங்கள் பிண்ணணியில் போராடுங்கள், ஆனால் புலிகளா கேட்டார்கள்?

“நீ வெளியே போ, நாங்கள் கிழித்துவிடுவோம்..” என்றார்கள். என்ன கிழித்தார்கள்?? என்பதற்கு முள்ளிவாய்க்காலே சாட்சி.

அதற்கு அழுபதற்கும் சிலர், அழிவினை தேடிகொண்டவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஆனால் அய்யோ கொலை என அழுவார்கள்..

வெல்லவே முடியாத இஸ்ரேலிய அரக்கனை திகைப்பில் விட்டு பாலஸ்தீன பிரதமராக முகமது அப்பாஸ் டெல்லி வந்திருக்கின்றார்

எளிதில் வீழ்த்தியிருக்க வேண்டிய சிங்களனை பெரும் பலசாலியாக்கிவிட்டு புலிகள் மாண்டே போயினர், அவர்களுக்கு இங்கு சிலர் ஒப்பாரி வைக்கின்றனர்

கொஞ்சமாவது அறிவு என்பது அவர்களுக்கு இருந்தால்தானே இவர்களுக்கும் இருக்கும்???

சுதந்திரம் என்பது எடுத்தவுடன் கிடைப்பதல்ல, அதற்கு தலைமுறை தலைமுறையாக போராடும் தயாரிப்பு வேண்டும், ராஜதந்திர நகர்வுகள் வேண்டும் , ஆதரவு வேண்டும்

இன்று தன்னாட்சி பெற்ற பாலஸ்தீனத்திற்கு சர்வதேச எல்லை உள்ளது, இனி சுதந்திர நாடகும்பொழுது சிக்கல் இல்லை, ஆனால் நாளை ஈழ எல்லை என எதனை காட்டமுடியும்? மறுபடி கண்டிமகாராஜா காலத்திற்கா செல்லமுடியும்?

பாலஸ்தீனம் விடுதலை வாசலில் நிற்கின்றது, ஈழப்போராட்டம் இனி இப்போதைக்கு தொடர வாய்ப்பே இல்லை, அவ்வளவு பெரும் அழிவினை புலிகள் செய்திருக்கின்றனர் , போராட வந்தவர்களை அழித்து, எல்லா வாசலையும் அடைத்து, தானும் அழிந்து போயினர் அவர்கள்

மீறியும் யாரும் போராடிவிட கூடாது என்பதற்காக வைகோ போன்ற சிலரை காவலுக்கு வைத்துவிட்டு செத்திருக்கின்றார்கள்..

பிரபாகரனும், அராபத்தும் போராளிகள், ஆனால் அராபத்த்திற்கு அறிவும், மனிதநேயமும் இருந்தது

பாலஸ்தீன அதிபரின் இந்திய வருகை உற்று நோக்கவேண்டிய ஒன்று, நிச்சயம் இஸ்ரேலிய கண்கள் சிவக்கும், இந்திரஜித் போல மாய அம்பு எய்வார்கள்

பாலஸ்தீனத்தை ஆதரித்த காரணம் இந்திரா, ராஜிவ் கொலையின் காரணங்களுள் ஒன்று என்பது சர்வதேச செய்திகள், ஆனாலும் மோடி துணிந்து கை கொடுக்கின்றார்

சும்மா சொல்ல கூடாது, யாழ்பாணம், மலையகம் என சென்றதாகட்டும், பாலஸ்தீன அதிபரை சந்தித்தாகட்டும் மோடி அசத்தத்தான் செய்கின்றார்

வெளிநாட்டு விஷயங்களில் மோடியின் அணுகுமுறை கைதட்டி பாராட்டவேண்டியது சந்தேகமில்லை, ஒரு துணிச்சல் தெரிகின்றது

ஆனால் உள்நாட்டு விஷயங்களில் சில விஷயம் பற்றி நாம் பேசகூடாது, சரி வெளிநாட்டு விஷயங்களிலாவது அசத்துகின்றார் அல்லவா?, நல்லது