பாலியல் கல்வி தீர்வு என்ற கோரிக்கை வலுக்கின்றது
குழந்தைகள் மீதான வன்முறை, பெருகி வரும் பலாத்கார கலாச்சார கொடுமைகள் , பருவ வயதில் தடுமாறும் பதின்மவயதினர் பிரச்சினைகளை எல்லாம் எப்படி சரி செய்வது, எப்படி வருங்கால தலைமுறையினரை காப்பது என் ஆளாளுக்கு கருத்து சொல்லி கொண்டிருக்கின்றார்கள்
இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாலியல் கல்வியினை கொண்டுவருவதே அன்றி வேறு தீர்வு அல்ல
இதனை தமிழகத்தில் உரக்க சொன்னவர் தங்க தலைவி குஷ்பு, அவர்தான் துணிந்து சொன்னார்
ஆனால் அவரை கலாச்சாரத்தை கெடுக்க வந்த காரிருள் என்றார்கள், ஊரை கெடுக்க வந்த குட்டிசாத்தான் என்றார்கள் இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்கள்
சில பதர்கள் அவர்மேல் வழக்கு தொடுக்கும் வரை சென்றன
பின் என்ன நடக்கும்? இம்மாதிரி கொடுமைகள்தான் நடக்கும்
இப்பொழுது இச்சிக்கல்களுக்கு எல்லாம் பாலியல் கல்வி தீர்வு என்ற கோரிக்கை வலுக்கின்றது
தலைவி எவ்வளவு பெரும் சமூக நோக்குள்ள தீர்க்கதரிசி என்பதை தமிழகம் புரிந்து கொண்டிருக்கின்றது
அந்த மாபெரும் தீர்க்கதரிசியினை, தொலைநோக்காளரை , உலக சமூக அறிவு பெற்றவரை தலைவியாக கொண்டதில் சங்கம் பெருமகிழ்ச்சி கொள்கின்றது