பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான்
சைமன் கட்டுகதை ஒரு பக்கம் என்றால் பெரியார் கோஷ்டிகளின் கட்டுகதை இன்னொரு பக்கம், பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான்,
இவை எல்லாமே பொய்
அது 1980களின் காலம் ஆண்டன் பாலசிங்கம் இயக்கத்துக்கு வந்திருந்தார், ஒரு கட்டடத்தில் புலிகளை அமர வைத்து மார்க்சிசம், உலக அரசியல் இன்னபிற அடிப்படை விஷயங்களை போதிக்கின்றார்
ஆத்திரத்தில் உள்ளே வந்தான் பிரபாகரன், “இதை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, ஒழுங்காக ஆயுதங்களை கழற்றி மாட்ட படியுங்கள்” என சொல்லிவிட்டு சென்றான்
இது அவனின் ஆரம்பகால நண்பர்கள் நேரில் கண்ட காட்சி
கொள்கை, சித்தாந்தம், எதிலுமே அவனுக்கு நம்பிக்கை இல்லை, துப்பாக்கி ஒன்றே தீர்வை தரும் என நம்பினான், அப்படியே நம்பி செத்தான்
ஒருவகையில் அவன் ஆயுதத்தை நேசித்த மனநோயாளி
அவன் பெரியாரை படிக்க சொன்னனாம், எப்படி எல்லாம் கதை கட்ட கிளம்பிவிட்டது இந்த கோஷ்டி?
பெரியார் என்ன இரண்டாம் உலகபோரின் அமெரிக்க தளபதியா? இல்லை ஹோ சி மின்ன? இல்லை மோசே தயானா?
