பாஷ்யம் அய்யங்கார்

அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்அவர் பெயர் பாஷ்யம் அய்யங்கார், 110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்

பின்பு ராஜாஜியோடு காங்கிரஸ்காரராகி விடுதலைபோரில் பங்குபெற்றார், அவரை இலக்கியம்பால் திருப்பியது கல்கியின் படைப்புக்கள்

கல்கியின் தமிழிலிலும் அவரின் வரலாற்று நாவல்களிலும் சொக்கி போய் கரைந்த பாஷ்யம் அய்யங்கார் தானும் அதுபோல எழுத முடிவெடுத்தார்

இனம் இனத்தோடு சேருமல்லவா?

தரையில் கோழிகளோடு கழுகு இருந்தாலும் வானில் கழுகுகள் பறப்பதை பார்த்தவுடன் அதுவும் பறக்கும் அல்லவா?

சிங்ககுட்டி ஆடுகளோடு வளர்ந்தாலும் பலம் கொண்ட சிம்மத்தின் உறுமலை கேட்டுவிட்டால் அப்பக்கம் ஓடுமல்லவா?

இனம் இனத்தோடு, மனம் மனத்தோடு என்பது அதுதான்

அப்படி பாஷ்ய அய்யங்கார் எழுத ஆரம்பித்தார், எழுதினார் குவித்தார், பெரும் இடத்துக்கு வந்தார், இன்றுவரை தமிழில் அதிக வரலாற்று புதினம் நாவல் எழுதியவர் அவர்தான்

அவரை பாஷ்யம் என்று சொன்னால் தெரியாது, சாண்டில்யன் என்றால் புரியும்

ஆம் சாண்டில்யன் என்றால் உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றிக்கும் உரியவன் என பொருள்படும்

என் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி என பொருள்படும் சாண்டில்யன் என்ற பெயரை அவர் கொண்டிருந்தார்

அவருக்கு முதலில் தமிழ் இலக்கணம் தெரியாது, தமிழை கசடற கற்றபின்பே அவர் எழுத வந்தார்

தமிழ் இலக்கிய உலகில் என்றும் அவருக்கு தனி இடம் உண்டு “கடல் புறா” . “கன்னிமாடம்””யவன ராணி” எல்லாம் தனி முத்திரைகள்

சாண்டில்யனை படிக்காமல் யாரும் இலக்கிவாதி ஆகியிருக்கமுடியாது

பிராமணர் தமிழுக்கு என்ன செய்தார்கள்? எல்லாம் திமுக அன்பர்களின் உழைப்பு என சொல்வதை போல் அறியாமையும் மடமையும் வேறு அல்ல‌

கல்கியும், சாண்டில்யனும் பிராமணர்களே, அவர்கள் தமிழை முறைபடி கற்றார்கள் அழியா காவியம் படைத்தார்கள்

சாண்டில்யனுக்கு இன்று பிறந்தநாள்

வரலாற்று நாவல்கள் எப்படி இருக்கவேண்டும் என தமிழருக்கு இலக்கணம் கொடுத்த அந்த பிதாமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்