பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?
தான் கொட்டிய காப்பியினை தானே துடைத்தார் நெதர்லாந்து பிரதமர் என செய்திகள் வருகின்றன, பலர் அவரல்லவோ மனிதர் என உருகிகொண்டிருக்கின்றனர்
இங்கும் அப்படியான நபர்கள் இருந்தார்கள், மாமனிதர் மகாத்மா காந்தி தனக்கான வேலைகளை தானே செய்தார்
ஜீவா எனும் பொதுவுடமை போராளி தனக்கு இருந்த ஒரே உடையினை தானே துவைத்தும் கொண்டான்
காஷ்மீருக்கு போய் நிலமையினை பாருங்கள் என நேரு சொன்னவுடன் தன்னிடம் குளிர் ஆடை இல்லை என்பதை சொல்லமுடியாமல் நின்றார் சாஸ்திரி
காமராஜரின் எளிமை உலகறிந்தது, ஏதும் இடங்களுக்கு முன் கூட்டியே சென்றாலோ இல்லை ஏதும் தடங்கல் என்றாலோ நள்ளிரவிலும் கட்டாந்தரையில் உறங்கியவர் அவர்
தன் சம்பளத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கே கொடுத்தவர் கலாம்
இந்நாட்டில் இருந்த நல்லவர்களை எல்லாம் மறந்துவிட்டு எஙகோ எவனோ தரை துடைத்தான் என சொல்லிகொண்டே இருங்கள்
பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?