பிரகாசமாக எரியும் போல
ஒரு நெருப்பு ஓயும் பொழுது பிரகாசமாக எரியும் என்பார்கள், அக்கிரமம் செய்பவன் ஆடித்தான் அடங்குவான் என்பது தர்மத்து விதி
அப்படி இந்த ஆளும் கட்சி அழிச்சாட்டியம் பல விஷயங்களில் தெரிகின்றது
உள்ளாட்சி தேர்தல், இடைதேர்தல் போல இவர்களுக்கு இதை தவிர்க்க தெரியவில்லை அல்லது முடியவில்லை
அதனால் செய்யகூடா காரியங்களை செய்கின்றார்கள், தினகரனுக்கு சின்னம் கொடுக்ககூடாது என குறுக்கே விழுவது நமக்கு தெரிகின்றது
இன்னும் வெளிதெரியாமல் நடப்பது எத்தனையோ?
நிச்சயம் ஸ்டாலின் இதில் தெளிவாக இருக்கின்றார், அவர் எதிரி தினகரன் என்றாலும் அவருக்கு சின்னம் கொடுக்க வேண்டும் என தெளிவாக சொல்கின்றார்
கவனியுங்கள் திமுகவுக்கு சவால் பழனிச்சாமி அல்ல, ஆட்சி மாறினால் தன்னால் எழுந்து கூட அவரால் நிற்க முடியாது
ஆனால் தினகரன் அப்படி அல்ல, எந்நிலையிலும் அவரால் கட்சி நடத்தமுடியும் அவ்வகையில் தினகரனே ஸ்டாலினுக்கு சவால்
அது தெரிந்தும் தினகரனுக்கு சின்னம் கொடுக்காமல் இழுத்தடிப்பது அநீதி என நாகரீகமாக சொல்கின்றார் ஸ்டாலின்
பயத்திலும் வெறுப்பிலும் அதிகாரம் நீங்கிவிடுமோ எனும் பயத்திலும் இந்த அரசுகள் இரண்டும் செய்வது மாபெரும் அநீதியே
மறுபடியும் முதல் வரியினை படியுங்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது