பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம்

பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம், இன்னும் பதில்வரவில்லை என ஆதங்கம்

டிஸ்கோ சாந்தி தங்கை லலிதாகுமாரி கூட பிரகாஷ்ராஜிடம் ஏகபட்ட கேள்விகளை கேட்டார், என்னை ஏமாற்றிவிட்டு அந்த மும்பைகாரியினை திருமணம் செய்வது சரியா? என்றெல்லாம் கேட்டார், பிரகாஷ்ராஜிடம் இருந்து என்ன பதில் வந்தது?

நல்ல காலத்திலே மோடியிடம் பதில்வராது, பெரும் அதிருப்தி நிலவிய காலத்தில் கிடைத்திருக்கும் வெற்றியில் மனிதர் உண்மையிலே மக்கள் நம்மை நம்புகின்றார்கள் என நம்ப தொடங்கிவிட்டார்

இனி எதனை செல்லாது என அறிவிக்க போகின்றாரோ? அவ்வளவு உற்சாகத்தில் இருக்கும் மனிதர் பிரகாஷ்ராஜூக்கு பதில் சொல்லவில்லையாம்

அவர் ஆனானபட்ட மன்மோகன்சிங் முதல் பாகிஸ்தான் பிரதமர் வரை பதிலே சொல்லாத தில்லலங்கடி, இவருக்கா பதில் சொல்ல போகின்றார்??