பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக
பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக இன்று ஐரோப்பா செல்கின்றார் அங்கு ஜெர்மன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்துகின்றார்
உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போர், அது தொடர்பாக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், ரஷ்யா தொடர்பான இந்திய அறிவிப்பினால் ஏற்பட்டிருக்கும் சில முரண்கள் என எல்லாவற்றையும் பேச அவர் செல்வார் என எதிர்பார்க்கபடுகின்றது
ஐரோப்பிய யூனியனின் பலமான நாடுகளான இந்த மூன்று நாடுகளிலும் மோடி செய்யும் சுற்றுபயணம் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்குமான உறவை வளர்ப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
உலகின் மிக பலமான அமைப்பான ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் சில புரிந்துணர்வுகள் அவசியம் அதை உறுதியாக செய்ய செல்லும் பாரத பிரதமரை தேசம் வாழ்த்துகின்றது
முன்னதாக கனடாவில் அமைக்கபட்டிருக்கும் வல்லபாய் பட்டேல் சிலையினை திறந்து வைத்து பட்டேலின் புகழையும் அவர் சோம்நாத் கோவிலுக்கு ஆற்றிய பெரும் பணியினை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது, அதாவது கனடாவிலும் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
மோடியின் செல்வாக்கு எட்டு திக்கும் பரவும். ஓரு நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு மோடி அவர்கள்.. இன்று உலக நாடுகள் மோடியை எதிர்பார்த்து ஏங்குகின்றனர்.
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳