பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை

மாவீரன் என சொல்ல பிரபாகரன் என்ன வீரம் காட்டினான் என்பதுதான் தெரியவில்லை

எல்லா இயக்கமும் சேர்ந்து பிடித்த யாழ்பாணத்தை மற்ற இயக்கங்களை ஒழித்துகட்டிவிட்டு பிடித்திருந்தான் அவனாக முழுக்க பிடிக்கவில்லை

இந்திய அமைதிபடையினை சிங்களனுடன் சேர்ந்துவிரட்டினான் இன்னொன்று இந்தியதரப்பு தற்காப்பு யுத்தம் போல கைகளை கட்டியபடி போராடியது, இந்திராவோ இல்லை இன்றைய மோடியோ இருந்தால் அன்றே அவனை அடித்து கொன்றிருப்பார்கள்

அமைதிபடை வெளியேறிய சில வருடங்களில் சந்திரகா புலிகளை அடித்து யாழ்பாணத்தில் இருந்துவிரட்டினார், அவர்தான் மாவீரச்சி

அதன் பின் புலிகளால் யாழ்பாணத்தை தொடமுடியவில்லை, ஏகபட்ட வீரர்களை பலிகொடுத்து பிரபாகரன் பிடித்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனது, ஒரு பிரயோசனமில்லை

பின் 2006ல் தொடங்கிய யுத்தம் புலிகளை மொத்தமாய் சுருக்கி முள்ளிவாய்க்காலில் முடித்தது

இதில் எங்கிருந்து மாவீரம் காட்டினார் பிரபாகரன்?

புலிகளின் வரலாற்றை படித்தால் சில முகாம்களை தகர்த்ததை தவிர எங்கும் வெற்றிபெற்றதாகவோ அதை அரசியலாக்கியதாகவோ தெரியவில்லை

ஒரு இலக்கே இல்லா காட்டுமிராண்டி சண்டை போன்றே நடந்திருக்கின்றது

தமிழகத்தின் இரு மாவட்ட பரப்பளவு கொண்ட பகுதியினைத்தான் புலிகள் ஆண்டனர், அப்பொழுதும் அவர்களுக்கும் சிங்களனுக்கும் புரிந்துணர்வு நிரம்ப இருந்திருக்கின்றது

இதெல்லாம் தமிழக எம்பி, எம்.எல்.ஏக்களே செய்யும் விஷயம்

மற்றபடி புலிகள் பெரும் வீரம் காட்டினர், பெரும் மாவீரன் பிரபாகரன் என்பதெல்லாம் வரலாற்றில் ஊதிபெருக்கபட்ட பிம்பங்கள், அந்த அதிகபடியான பிம்பம் 2009ல் மொத்தமாக சரியும் பொழுது பலரால் ஏற்கமுடியவில்லை என்பது அதுதான்

எல்லாம் வெற்று பிம்பம், காற்றடித்த பலூன் போன்ற ஓவர் பில்டப் அன்றி வேறல்ல