பிரபாஸின் சாஹோ
சமீபத்தில் வந்த பிரபாஸின் சாஹோ திரைப்படம் பிரான்ஸில் சர்ச்சையினை கிளப்பிவிட்டது
அதாவது அது பிரான்ஸ் படமான லார்கோ வின்ஞ் படத்தின் காப்பி என அதன் இயக்குனர் ஜெரோம் சொல்லியிருந்தார்
தனக்கே உரித்தான நக்கலில் சொல்லியிருந்தார்
“நான் இந்தியாவுக்கு சென்றால் எனக்கு பெரும் எதிர்காலம் இருக்கலாம், ஏனெனில் என் பிரெஞ்ச் படத்தை இந்தியர்கள் எடுப்பதை விட நானே எடுக்கலாமே” என டிவிட் செய்திருந்தார்
இதை கண்ட தெலுங்கு சினிமா உலகம் அவமானத்தில் நெகிழ்கின்றது, விஷயம் 100% உண்மை என்பதால் யாரும் பேசமுடியவில்லை
அறிவியல் சாதனம் முதல் பெப்சி வரை பேட்டண்ட் வைத்திருப்பவன் வெள்ளையன்,
இங்கு விற்கபடும் எல்லா பொருளிலும் அவனுக்கு வருமானம் உண்டு
சும்ம்மா அவர்கள் கதையினை உருவி எடுத்துவிட்டு பிரபாஸ் மட்டுமே கோடி கோடியாக சம்பளம் வாங்கினால் விடுவார்களா?
ஹாலிவுட் இயக்குநர்கள் விழித்துகொண்டார்கள் இனி எல்லா இந்தியபடத்தையும் பார்ப்பார்கள், காப்பி உறுதி என்றால் வழக்கு பாயலாம்
(பின்னே, பதிலுக்கு இந்திய படங்களை காப்பி செய்து பழிவாங்குகின்றோம் என்றா அவர்கள் கிளம்ப முடியும்
தெலுங்கு தமிழ்படங்களை பார்த்தால் அவர்கள் அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கபட்டுவிட மாட்டார்களா?)
நமது ஊர் காப்பி பிரபலங்களான ஏ.எல் விஜய், மிஷ்கின், அட்லி , முருகதாஸ் ஆகியோர் கவனமாக இருப்பது நல்லது
காரணம் காப்பி ஒன்றை தவிர இவர்களிடம் ஒருநாளும் சொந்த சரக்கே கிடையாது.
இன்னும் சில கொரிய, ஈரானிய, சீன, ஹாலிவுட் டைரக்டர்கள் இவர்கள் படங்களை பார்க்கவில்லை போல
ஒருவேளை விஜய் மிஷ்கின் அட்லி முருகதாஸ் படங்களை பார்த்துவிட்டால் இரு விஷயம் நடக்கலாம்
முதலில் இப்படியுமா காப்பி அடிப்பார்கள் என அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் செத்துவிடலாம்
இல்லை சட்டமாவது ம…ரவது என சொல்லிவிட்டு இங்கு வந்து இவர்களை பிடித்து போட்டு அடித்து முதுகிலே மிதிக்கலாம்…
