பிரமாண்ட காலடிதடம்
இமயமலை என்பது ரகசியங்களின் கூடாரம், ஏகபட்ட மர்மங்களை அது கொண்டது
ரிஷிகள், மூலிகைகள், இரண்டாயிரம் வருடமாக வாழும் சாமியார்கள் என ஏகபட்ட விஷயம் அங்கு உண்டு
அதில் ஒன்றுதான் யதி
அந்த நேபாள சொல்லுக்கு பனி மனிதன் என பெயர், ராட்சத மனிதன் போன்ற இனம் ஒன்று உடலெல்லாம் முடியாக அங்கு வாழ்வதாக நம்பபடுகின்றது
அது காட்டுவாசி பழங்குடி போல பனிவாசி பழங்குடி மக்கள் என ஒரு பேச்சும் , இல்லை இல்லை பனிவாழ் கொரிலா என்றொரு தியரியும் உலகில் உண்டு
அவ்வப்போது அதை பற்றிய கதைகள் வரும்
சிலமுறை ராணுவ வீரர்களும், மலையேற்ற வீரர்களும் அதை கண்டார் என்பார்கள்
எவரெஸ்ட் ஏற சென்று வழிதவறி சிக்கிய ஒருவனை யதி காப்பாற்றிவிட்டு சென்றதாகவும் முன்பு செய்தி வரும்
அப்படியான யதி பற்றிய செய்தி மறுபடியும் வந்திருக்கின்றது
பிரமாண்ட காலடிதடம் அங்கு சிக்கியிருக்கின்றது, இது யதியின் காலடி தடம் என்கின்றார்கள்
ஆனால் ஒரு கால் தடம்தான் இருக்க்கின்றதாம் அதுதான் பலத்த யோசனையினை கொடுக்கின்றது
ஆக ஒற்றைக்கால் யதியும் இருக்கலாம் அல்லவா?
