பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பேசிய வார்த்தை கடும் சர்ச்சையாகின்றது

Image may contain: 4 people, people smiling, people standing and suit

இந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் ஆஸ்திரேலியா சென்றிருக்கின்றார், அங்கு அவர் பேசிய வார்த்தை கடும் சர்ச்சையாகின்றது

வந்தவருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் விருந்தளித்திருக்கின்றார், பிரான்ஸ் அதிபரும் ருசித்து உண்டுவிட்டு விடைபெறும் நேரம் மேடையில் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஆஸ்திரேலிய பிரதமரே, உங்கள் “ருசியான மனைவி”க்கும் நன்றி என சொல்லிவிட விஷயம் பற்றிவிட்டது

“Delicious Food” என்பதை அவர் “Delicious Wife” என சொன்னது விவகாரமாகிபோனது

ஆஸ்திரேலிய அம்மணி முகத்தை மூடி கொண்டு சிரித்துவிட்டு ஓடிவிட்டது, ஆஸ்திரேலிய பிரதமர் ஒருமாதிரி (ஐ நோ.. ஐ நோ) என தலையாட்டிவிட்டே நழுவிவிட்டார்

பிரான்ஸ் அதிபருக்கு ஆங்கிலம் தெரியாதா? என எதிர்கோஷ்டி எல்லாம் கிளம்பிற்று

மனிதர் சும்மாவே தன்னை விட 20 வயது மூத்தபெண்ணை திருமணம் செய்தவர் என்பதால் சர்ச்சைகள் குவிகின்றன‌

அவர் வாய்தவறி சொல்லிவிட்டார் என்கின்றார்கள்

நல்ல வேளையாக நமது பிரதமர் எந்த நாட்டிலும் இப்படி உளறவில்லை, சும்மாவே அவரை படாதபாடு படுத்துபவர்கள் இப்படி எங்காவது வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா?

இதிலெல்லாம் நம் பிரதமர் படு சமத்தானவர்.