பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா
பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா, அவன் நாட்டுக்காக செத்தானா என ஏகபட்ட திராவிட கும்பல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன
பிராமண இனம் தமிழகத்தில் அய்யர், தெலுங்கில் அய்யங்கார், கேரளாவில் நம்பூதிரி, வடக்கே சாஸ்திரி, ஷர்மா வங்கத்தில் சாட்டர்ஜி, பானர்ஜி, காஷ்மீரில் பண்டிட் என பல பெயர்களில் அழைக்கபடுகின்றது
இதை நாம் மட்டும் சொல்லவில்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்
“பார்ப்பான் ஒவ்வொரு இடத்திலியும் ஒவ்வொரு பெயரில இருக்கானுக., பேருதான் வேறங்க ஆனா எல்லா பயலும் பார்பானுங்கங்க” என பல மேடைகளில் சொல்லி பல ஏடுகளில் எழுதியவர் பெரியார்
அதில் உண்மையும் உண்டு
இந்தியாவில் தளபதிகள் முதல் பல பதவிகளில் பிராமணர் இருந்தனர், ஏன் உளவுதுறை உருவாக்கபட்டபொழுது அதன் தலைவரும் மிக சிறந்த உளவாளிகளும் பிராமணராகவே இருந்தனர்
இந்தியாவின் முதல் “பரம்வீர் சக்ரா” எனும் ராணுவத்திற்கான விருதினை பெற்றவர் சோம்நாத் ஷர்மா எனும் பிராமணர்
ஒவ்வொரு யுத்தத்திலும் செத்த ஏகபட்ட பிராமண ராணுவ வீரர்கள் உண்டு
அவ்வளவு ஏன் ? முன்பு புல்வமா தாக்குதலில் கொல்லபட்ட பங்கஜ் திரிபாதி, மகேஷ் சர்மா, குமார் ராவட் என்ற மூன்று பேரும் பிராமண சமூகம் என்கின்றது செய்தி
பிராமணர் என்றால் தமிழ்நாட்டு கோவிலில் மணியடிக்கும் அய்யர், சங்கராச்சாரி , எஸ் வீ சேகர், எச்.ராசா, குருமூர்த்தி மட்டுமே என இவர்களாக முடிவு செய்து ஏதாவது பேசிகொண்டிருப்பது
அதெல்லாம் இருக்கட்டும், சுதந்திர போராட்ட வீரன் என ஒரு திக காரனை காட்டிவிடுங்கள், ஒரு கருப்புசட்டைகாரனை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்
அட அவ்வளவு ஏன்? நாட்டுக்காக செத்த ஒரு திக, திமுக உறுப்பினரை காட்டுங்கள் பார்க்கலாம்
திகவும் திமுகவும் செய்தது என்ன?
இலங்கையில் இந்நாட்டு ராணுவத்தினை கொன்று குவித்த புலிகளை ரகசியமாக தமிழகத்திற்கு வரவழைத்து காயத்திற்கு மருந்து போட்ட மிக பெரிய சேவை என்பதை தவிர, அந்த தேசதுரோகத்தினை தவிர ஒன்றுமே இல்லை