பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில்…

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றார், அவர் மறுபடி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் போதிலும் அதிர்ச்சி தீரவில்லை

அதாவது அம்மணிக்கு இன்னும் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு , சில சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை வேண்டும் , தேர்தல் நடத்தினால் அசுரபலம் கிடைக்கும் என்றேதான் முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்

ஆனால் உள்ளபலமும் போய், கூட்டணிகளிடம் கெஞ்சும் மிக துர்பார்க்கிய நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றார் அம்மணி

இதுதான் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று என்பார்கள்

மோடிக்கும் அடுத்த வருடம் தேர்தல் நடத்தலாம் எனும் திட்டம் இருப்பதாக சில ஏடுகள் எழுதின, தெரசா மேயின் நிலமையினை கண்டபின் மோடி இனி கொஞ்சம் யோசிக்கலாம்