பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றது
விமான போக்குவரத்தில் உலகுக்கே பாடம் எடுத்தது பிரிட்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸ்
சொகுசு பயணம் என்றால் என்ன? உபசரிப்பு என்றால் என்ன? பிரமாண்ட விமானம் என்றால் என்ன என உலகுக்க்கே அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள். பாதுகாப்பான, சொகுசான பயணம் என பெரும் ஆவணம் வைத்திருப்பவர்கள் அவர்கள்
உலகெல்லாம் அவர்களுக்கு தனி பெயர் உண்டு
அப்படிபட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றது, ஊழியருக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை
சிலமாதங்களாக சம்பளம் கொடுக்கபடாததை தொடர்ந்து நேற்று முதல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டனர், பல சேவைகள் ரத்து செய்யபட்டுவிட்டன
மிக பெரும் பறக்கும் சாம்ராஜ்யமான பிரிட்டிஷ் ஏர்வெஸ் சரிந்துகொண்டிருக்கின்றது
உலகெல்லாம் விமான சேவை நிறுவணங்களின் கதி இதுதான்
மலேசியாவின் மாஸ், பிரிட்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற ஜாம்பவான்களே தள்ளாடும் நிலையில் ஏர் இந்தியாவும் திகைக்கத்தான் செய்கின்றது
ஏர் இந்தியாவினை மோடி சரித்தார் என இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் உலக நிலவரங்களை பார்த்து அங்கெல்லாம் யார் சரித்தார் என தெரிந்து கொண்டால் நல்லது
