பிரியங்கா கணக்கு
காங்கிரஸில் வழக்கமாக கோஷ்டி பூசல்தான் வெடிக்கும் சத்திய மூர்த்தி பவன் முதல், டெல்லி அக்பர் ரோடு வர எங்கெல்லாம் காங்கிரஸ் அலுவலகம் உண்டோ அங்கெல்லாம் கோஷ்டி சண்டை உண்டு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எந்த காங்கிரஸ் அலுவலகமும் அதற்கு தப்பமுடியாது
அட அலுவலகம் என்ன? கட்சி கொடி ஏற்றினால் கூட ஒரு கோஷ்டி கொடியேற்றும்பொழுது ஒரு கோஷ்டி கொடி இறக்கும் ஒரு கோஷ்டி கயிற்றில்தொங்கும், ஒரு கோஷ்டி கொடிகம்பத்தை பிடுங்கும்
இன்னும் ஏக அழிச்சாட்டியங்கள் அங்கு சாதாரணம் , பார்ப்பவர்களும் பெரிதாக அலட்டிகொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்படித்தான் என்பது போல் சென்றுவிடுவார்கள்
அப்படிபட்ட கோஷ்டி பூசல் காங்கிரஸில் முதல் முறையாக மூத்த கோஷ்டி இளைய கோஷ்டி என வரிந்து கட்டுகின்றார்கள்
இதில் முதல் கல்லை எறிந்திருப்பவர் பிரியங்கா
அம்மணி மிக தைரியமாக சொல்லிவிட்டது “என் சகோதரனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட பிரச்சாரதிற்கு வரவில்லை, பின் எப்படி அவன் மட்டும் தோல்விக்கு காரணம்?”
பெரிசுகள் செவிட்டில் அடித்து கேள்வி கேட்டுவிட்டார் பிரியங்கா
ராகுலும் அதை தொடர்ந்து பெரிசுகள் தங்கள் வாரிசுகளுக்காக மல்லுகட்டியதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிட்டார்
(ப.சிதம்பரத்தை சாடியிருப்பாரோ? )
ஆக காங்கிரஸில் சலசலப்பு ஆரம்பித்தாயிற்று, பிரியங்காவின் வார்த்தைகள் சாதாரணம் அல்ல
அரசியல் ரீதியாக மிகபெரும் முடிவினை அக்கட்சி எடுக்க போவதின் எச்சரிக்கை அறிகுறி
“ஏ பெருசுகளே நீங்களே கழன்றுகொண்டு இளைய சமூகத்துக்கு வழிவிடுகின்றீர்களா? இல்லை காலை பிடித்து இழுத்து எறிய வேண்டுமா? ” என்பது போன்ற எச்சரிக்கை அது
ஒரு காலத்தில் காமராஜர் போன்றவர்களையே இந்திரா விரட்டி அடித்த காட்சி வரலாற்றில் உண்டல்லவா? அக்காலம் இனி பிரியங்கா வடிவில் திரும்பினாலும் திரும்பலாம்
ஒருவேளை மூத்த காங்கிரஸ் பெருச்சாளிகளை அங்கிருந்து விரட்டிவிட்டால் என்னாகும்?
பாஜக ஓடிசென்று தூக்கி அணைக்காதா? நிச்சயம் அணைக்கும்
அதன்பின் என்னாகும்?
காங்கிரசை கெடுத்த அந்த பெரிசுகள் பின் பாஜகவினை ஒழிக்காமாலா போய்விடும்?
பிரியங்கா கணக்கு அப்படி இருக்கலாம். அது மிக சரியான கணக்காகவும் இருக்கலாம்