பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌

பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌

இந்தியா இந்துநாடே, அது இந்துக்களின் அடையாள நாடாகத்தான் அறியபட வேண்டும். உலக மத சம்பிரதாய‌படியும் உலக நாடுகளின் பார்வையும் அதேதான்

இதுதான் நியாயமும் தர்மமுமாகும்

ஜெருசமேம் எங்கள் பூமி அதனால் இது யூதநாடு என்கின்றது இஸ்ரேல்

ஜெருசலேம் எங்களுக்கும் புண்ணிய பூமி என சொந்தம் கொண்டாடுகின்றது இஸ்லாமிய சமூகம், கிறிஸ்தவமும் சந்தடி சாக்கில் அதில் கைவைக்கும் அதை சொல்லி முன்பு சிலுவை போர் நடத்திய சமூகம் அது

ஆக ஜெருசேலேமுக்கு இச்சமூகங்கள் சண்டையிடலாம், புண்ணிய பூமி என கொண்டாடலாம்

அதையே காசியும் காஞ்சியும் பழனியும் இந்நாடு முழுக்க இருக்கும் இந்து ஆதார பூமி இந்து பூமி என இந்துக்கள் சொன்னால் தவறாம்

வாடிகன் கிறிஸ்தவ தலமையகம் அது கிறிஸ்தவ தேசம், அதை ஒட்டிய பகுதிகள் கிறிஸ்தவ காவல் பூமி

மெக்கா மதீனா இருப்பதால் சவுதி இஸ்லாமிய தாயகம்

ஜெருசலேம் இருப்பதால் யூதர்களுக்கு இஸ்ரேல் தாய்பூமி, கூடவே கிறிஸ்தவருக்கு புண்ணிய பூமி

காசியும், காஞ்சியும், ஹரித்துவரும், பூரியும் இன்னும் ஏகபட்ட புண்ணிய ஷேத்திரங்கள் இருப்பதால் சந்தேகமில்லாமல் இந்நாடு இந்துக்களின் பூமி

அம்மணி சரியாகத்தான் , அதுவும் மிக சரியாகத்தான் பேசியிருக்கின்றது. இதில் என்ன தவறு என்பதுதான் தெரியவில்லை

மற்ற மதத்தினருக்கு அவர்கள் மதம் பிறந்த இடமும் அவர்களின் புண்ணிய ஸ்தலம் இருக்குமிடமெல்லாம் அவர்களுக்கு சொந்தமாம், அவர்கள் மத நாடாம்

ஆனால் இந்துக்களின் புண்ணிய நதிகளும் ஸ்தலங்களும் ஆலயங்களும் இருக்குமிடம் சமய சார்பற்ற இடமாம், இந்துக்கள் பூமி இல்லையாம்

இதெல்லாம் திராவிட நியாய தர்மங்கள், நம்பிகொள்ளுங்கள்