பிறக்கபோகும் புதுவருடம் நிம்மதியாக பிறக்காது போல
ஈரான் தன் மக்களின் அதிருப்தி, தொடர்ந்து தன் கையினை கட்டும் நாடுகளை மிரட்ட வேண்டிய நிலை என இக்கட்டான நிலையில் இருக்கின்றது
எங்களை வாழவிடாத நாடுகளை நாங்கள் வாழவிடமாட்டோம் என எச்சரித்துகொண்டிருக்கும் ஈரான் பெரும் போரில் இறங்கலாம் என்கின்றன செய்திகள்
அமெரிக்கா ஒரு மாதிரியான படைகுவிப்பினை செய்கின்றது, இஸ்ரேல் அதன் அதிநவீன ஏவுகனையினை சோதிக்கின்றது
அந்த ஏவுகனை ஈரானுக்கானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
முடிந்தவரை போரை தவிர்த்த ஈரான் ஒரு ஆட்டத்துக்கு தயாராகிவிட்டது, சில பலத்த எச்சரிக்கைகளை காட்டபோகின்றது, இது போராக வெடிக்குமா இல்லை எச்சரிக்கை வேட்டுகளுடன் நின்றுவிடுமா என்பதுதான் தெரியவில்லை
இருதரப்பும் வரிந்து கட்டுகின்றார்கள், பிறக்கபோகும் புதுவருடம் நிம்மதியாக பிறக்காது போல