பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா?
முன்பொருமுறை காஞ்சி மகா பெரியவரிடம் பகுத்தறிவில் மூழ்கி முத்தெடுத்த ஒருவர் கேட்டார்
“பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா? அறிவும் திறமையுமே ஒருவனை முன்னேற்றும். இந்த விதி, பூர்வ ஜென்ம புண்ணியம், கர்மா என ஏன் வீணாக சொல்கின்றார்கள?”
பெரியவர் அவரை ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்க்க சொன்னார்
அங்கே ஏழைக்கு பிறந்த குழந்தை பாயில் வெறுமையாக கிடந்தது, பணக்காரனுக்கு பிறந்த குழந்தை நகையூட்டி பட்டு தொட்டிலில் உறங்கிகொண்டிருந்தது
அவனிடம் பெரியவர் சொன்னார், “பிறப்பால் எல்லோரும் சமம் என்றால் இந்த குழந்தைகளுக்குள் பேதம் ஏன்? பூர்வ ஜென்மம், விதி, கர்மா என்பதெல்லாம் இதுதான்”
அந்த பகுத்தறிவு அதன் பின் பேசவில்லை
இந்த படமும் அதைத்தான் சொல்கின்றது, சேலத்து சாதாரண விவசாயி இந்த இடத்துக்கு வர அவரின் கர்மா அல்லது விதி எப்படி எல்லாம் ஒத்துழைத்திருக்கின்றது?
பெரியார் கொடிபிடித்து கலைஞரும் அண்ணாவும் கட்சி தொடங்கி,அதை ராமசந்திரன் உடைத்து அதை ஜெயா கைபற்றி
அவரும் ஊழலில் சிக்கி சிறை செல்ல பன்னீரை வைத்து, அந்த பன்னீரையும் ஜெயா மறைந்தபின் தூக்கி எறிந்து இவரை வைத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா
இவரை காக்க மறுபடியும் வென்று அமர்ந்திருக்கின்றார் மோடி
ஒரு மனிதனின் தலைவிதி நன்றாய் இருந்தால் சூழல் அவனுக்கு ஏற்றவாறு அமையும் என ஞானி சாணக்கியன் சொன்னது இதுதான்
விதி, கர்மா, பூர்வஜென்ம புண்ணியம் இவற்றை நம்பாதவர்களுக்கு கண்ணெதிரே சாட்சியாக வந்து சவால் விடுகின்றார் பழனிச்சாமி
சில விஷயங்களை நம்பத்தான் வேண்டி இருக்கின்றது
